வியாழன், 2 ஜூன், 2011

செய்திகள் சில வரிகளில்!

எகிப்து; மேலும் ஒரு முன்னாள் அமைச்சருக்கு தண்டனை!
 
கிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் பதவி காலத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தவர் அஹ்மத் அல் மக்ரபி. இவர்  மீது சட்டவிரோதமாக பொதுச்சொத்துக்களை கையகப்படுத்தியது மற்றும் 73 மில்லியன் டாலர் அளவுக்கு பொதுப்பணத்தை விரயமாக்கியது என்ற குற்றசாட்டின் அடிப்படையில் இவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம். ஏற்கனவே எகிப்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லி 12 ஆண்டுகள சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. செய்திகள் சில வரிகளில்!
 
எகிப்தின் ரபாஹ் எல்லை திறப்பு; ஹமாஸ் வரவேற்பு!
 
காஸா மற்றும் எகிப்தின் எல்லைப்பகுதியான ரபாஹ் நுழைவாயில் வழியாக எகிப்திற்குள் வந்து மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி செல்வார்கள் காஸா மக்கள். கடந்த 2007 லிருந்து இவ்வழியை பயன்படுத்தி வந்தனர். இது இஸ்ரேலின் கழுகு கண்களை உறுத்த, இஸ்ரேலின் நிர்பந்தம் காரணமாக இந்த நுழைவாயிலை மூடினார் எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக். இந்நிலையில் எகிப்தின் ராணுவ அரசு மீண்டும் இந்த நுழைவாயிலை நிரந்தரமாக திறக்க உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி ௨௮-௫-௧௧ சனிக்கிழமை  முதல் திறக்கப்படும் இந்த நுழைவாயில் காளை ௯ மணி முதல் தொடர்ந்து எட்டு மணிநேரம் திறந்திருக்கும் என்றும், வெள்ளிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் நேரம் அதிகரிக்கப்படும் என்றும் எகிப்து அறிவித்துள்ளது. எகிப்து அரசின் இந்த அறிவிப்பை ஹமாஸ் மகிழ்வுடன் வரவேற்றுள்ளது. வழக்கம் போல் இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
போஸ்னிய முஸ்லிம்களை கொன்ற கொடூரன் கைது!
 
1992 முதல் 1995 வரை போஸ்னிய முஸ்லீம்களுக்கும், செர்பியர்களுக்கும் இடையிலான போர் அனைவரும் அறிந்ததுதான். 44 மாத மோதலில் உலக மக்களை நடு நடுங்க வைத்தது போஸ்னிய முஸ்லிம்  இனப்படுகொலையாகும். 1995ம் ஆண்டு நடந்த இந்த கொடூரப் படுகொலையில்,சுமார் 8 ,000௦௦௦க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்களை  கொன்று குவித்தது போஸ்னியாவை அப்போது ஆண்டு வந்த செர்பிய ஆட்சியாளர்களின் ராணுவம். இந்த இனப்படுகொலைக்கு மூளையாக திகழ்ந்தவரான, முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதியான ரட்கோ மிலாடிக் ஆவார்.  இவர் போர் குற்றவாளியாக ஐ.நா வால் கடந்த 1996 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், செர்பியாவில் வைத்து இவரைக் கைது செய்துள்ளனர். ஐரோப்பாவிலேயே அதிகம் தேடப்பட்ட நபர் மிலாடிக்தான் என்பது குறிப்பிடத்தக்கது. i5 ஆண்டுகள் தேடலுக்கு  பின் ஒரு முஸ்லிம் இன படுகொலை புகழ்  கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான். ஆனால் கண் முன்னால் உலாவரும் பயங்கரவாதிகளான புஷ், ஒபாமா, கிளிண்டன், மோடிகளின் கைது எப்போது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக