திங்கள், 13 ஜூன், 2011

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமா? சஷ்டி விநாயகர் கோயிலா?

டந்து முடிந்த சட்டமன்றத்  தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட தேமுதிக வின் சந்திரகுமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்டப்பட்ட எம்.எல்.ஏ., அலுவலகம் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.,க்களை பாடாய்படுத்தியதால், அலுவலகத்தை வாஸ்து முறைப்படி மாற்ற, புது எம்.எல்.ஏ., உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த சில நாட்களாக இந்த அலுவலகத்தில் பரிகார பூஜைகள், வாஸ்து முறைப்படி மாற்றம் என்று பல்வேறு பணிகள் நடந்தன. தற்போது எம்.எல்.ஏ., அலுவலக சுவரில் விநாயகர் படம் வைக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., அலுவலகத்தின் உட்புற அறையில் பயன்பாட்டுக்கான இடத்தை குறைக்கும் வகையில், சிறிய தடுப்புக்கள் அமைத்து, அதற்குள் அழகிய பூந்தொட்டிகள் வைத்து பல மாற்றங்களுடன் ஜொலிக்கிறது.எம்.எல்.ஏ., அலுவலகத்தின் வாஸ்து பிரச்னைக்கு பூந்தொட்டியும், விநாயகர் சிலையும் முற்றுப்புள்ளி வைக்கும், என்று எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ., அலுவலக வாஸ்து பிரச்னைக்கு பரிகாரம் செய்யப்பட்டதால், ஜூன் 15ல் சந்திரகுமார், அந்த அலுவலகத்தில் தனது எம்.எல்.ஏ., பணியை துவங்குவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
நன்றி; தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக