வியாழன், 2 ஜூன், 2011

இரண்டில் எது சரி கலைஞரே?

டந்த ஆண்டு  டிசம்பர் மாதம் தனது சொத்து பட்டியலை வெளியிட்டு அசத்திய திமுக தலைவர் கருணாநிதி, ''என்னைப்   பற்றி குறை கூறுபவர்களுக்கும், அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் எனது சொத்துகள் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை.என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் குழந்தையாக இருந்தபோதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவுக்கும், உயர்நிலைப் பள்ளியில் படிக்க திருவாரூரில் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய அளவுக்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம்தான் என்னுடையது.
என்று கூறியிருந்தார். அதாவது மற்றவர்கள் விமர்சிபப்து போன்று இந்த கருணாநிதி வெறுங்கையோடு சென்னை வந்து கோடிகளை குவித்தவனல்ல. மாறாக இயல்பாகவே எனது குடும்பம் ஓரளவு வசிதியானது என்று கூறுகிறார் கருணாநிதி.
 
இவ்வாறு சொல்லி சில மாதங்களே கழிந்த நிலையில் அவரது அருந்தவப் புதல்வி கனிமொழி கைது செய்யப்பட்ட பின் கடந்த 22 ம் தேதி அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, தான் வறுமையான குடும்பத்தில் பிறந்தவன் என்று கூறுவதை பாருங்கள்;      
''நான் செல்வச் செழிப்பான பெரும் தனவந்தர் குடும்பத்தில் நான் பிறந்தவன் அல்லன். தஞ்சை மாவட்டத்தில் (தற்போது நாகை மாவட்டத்தில்) திருவும் வளமும் கொண்ட திருக்குவளை கிராமத்தில் சுற்றிலும் சூழ்ந்திருந்த வயல்களில் கிடைத்த பயிரையும், நெல்லையும், அரிசியையும் பயன்படுத்தி கொண்டு, ஒரு ஓட்டுவில்லை வீட்டில் விவசாயியாகவும் இசைமேதைகளில் ஒருவராகவும் இருந்த முத்துவேல நாதசுரக்காரருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தவன் நான்' என்று அந்த அறிக்கையில் கூறுகிறார் கருணாநிதி. அதாவது தான் தனவந்தர் குடும்பத்தில் பிறக்கவில்லை என்றும், வயல்களின் கிடைத்த நெல்லையும் அரிசியையும் உண்டு வாழ்ந்த குடும்பத்தில் பிறந்தவன் என்கிறார்.
 
அப்படியானால் திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவுக்கும், உயர்நிலைப் பள்ளியில் படிக்க திருவாரூரில் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய அளவுக்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம்தான் என்னுடையது என்று சொன்னது என்ன ஆச்சு? இரண்டில் எது சரியென்று கொஞ்சம் சொல்லுங்க கலைஞரே!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக