சனி, 17 மார்ச், 2012

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டலம் சார்பாக, நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வுக் கருத்தரங்கம்



த்தியத்தில் உறுதியாய்....சமூகத்தில் இணக்கமாய்....என்ற கொள்கையுடன் இந்தியா மட்டுமன்றி வளைகுடா நாடுகளிலும் முத்திரை பதித்துவரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டலம் சார்பாக,  16 -3 -2012 வெள்ளிக்கிழமை  அன்று சமுதாய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

குவைத் மிர்காப் பகுதியில் அமைந்துள்ள மன்னுசல்வா உணவகம் பார்ட்டி ஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு  இதஜ குவைத் மண்டலத்தலைவர் முகவைஅப்பாஸ் தலைமையேற்க, மண்டலச் செயலாளர் சாதிக் சதாம் வரவேற்புரையாற்றினார். KIFF அமைப்பின் பிரநிதி சகோதரர் அப்பாஸ், 'தமிழ்நேசன்' விழிப்புணர்வுக் கையேடு ஆசிரியர் சகோதரர் அமானுல்லாஹ், TMCA அமைப்பின் பொதுச்செயலாளர் சகோதரர் திருமங்கலக்குடி. அப்துர்ரஹீம், தமுமுக குவைத் மண்டலத்தலைவர் பேராசிரியர் தாஜுத்தீன் ஆகியோர் முறையே,
படி தாண்டும் பாவைகளும் பக்குவப்படுத்தும் வழிகளும், ஊடகங்களும்-முஸ்லிம்களும், வேற்றுமையில் ஒற்றுமை, இஸ்லாத்திற்கெதிரான எதிர்ப்பலையை எதிர்கொள்வது எப்படி? ஆகிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள். 

நிகழ்ச்சிக்கு வந்திருந்த சகோதரர்களின் நிகழ்ச்சி பற்றிய எண்ண ஓட்டத்தை அறியும் வகையில் அவர்களுக்கு ஒரு துண்டுசீட்டு வழங்கி அவர்களின் கருத்து கேட்கப்பட்டது. அதில் அனைத்து சகோதரர்களும் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாகவும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் வாரம் ஒருமுறை அல்லது மாதத்தில் இருமுறையாவது நடத்தப்பட வேண்டும் என்று கருத்தை பதிவு செய்ததோடு,  சகோதர அமைப்புகளை அரவணைக்கும் இதஜ பணிகள் சிறக்கவும் துஆ செய்திருந்தார்கள். இறுதியாக இதஜ மண்டலத் துணைத்தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக