வெள்ளி, 30 மார்ச், 2012

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம்.

தமிழ்நாட்டில் புதிய மின்சார கட்டண உயர்வை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

புதிய கட்டண விகிதம் பற்றிய விவரம் வருமாறு:

வீடுகளில் 2 மாதங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் 1 ரூபாய் 10 காசு.
மேலும் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் மாதாந்திர நிலைக்கட்டணமாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.

200 யூனிட் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் யூனிட்டுக்கு 1 ரூபாய் 80 காசு.

201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான 300 யூனிட்டுகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் 50 காசு வீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் 500 யூனிட் வரை பயன்படுத்துவோரிடம் மாதாந்திர நிலைக்கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்படும்.

500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும், 201 முதல் 500 யூனிட் வரையிலான அடுத்த 300 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதமும், 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.75 வீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் மாதாந்திர நிலைக்கட்டணமாக ரூ.20 செலுத்த வேண்டும்.

வழிபாட்டு தலங்களை பொறுத்த மட்டில், 120 யூனிட் வரை பயன்படுத்தும் வழிபாட்டு தலங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.2.50 வீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். 120 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வழிபாட்டு தலங்களுக்கு யூனிட்டுக்கு 5 ரூபாய் வீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். 

குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.50 வீதமும், 501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். 

விசைத்தறிகளை பொறுத்த மட்டில் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் மின்சார கட்டணம் கிடையாது. அதாவது 500 யூனிட் வரை இலவச மின்சாரம். 501 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் யூனிட்டுக்கு 4 ரூபாய்.

100 யூனிட் வரை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு 4 ரூபாய் 30 காசு கட்டணமாக வசூலிக்கப்படும். 
100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் யூனிட்டுக்கு 7 ரூபாய் வீதமும் கட்டணம் வசூலிக்கப்படும். 

உயரழுத்த இணைப்புகள்: (அடைப்புக் குறிக்குள் தற்போதைய கட்டணம்)
உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.5.50 (ரூ.4) வீதம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதேபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.4.50 (ரூ.4.00).

தனியார் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.50 (ரூ.4.50) ஆகவும், வர்த்தகம் மற்றும் இதர வகைகளுக்காக கட்டணம் யூனிட்டுக்கு 7 ரூபாயாகவும் (ரூ.5.80), ரெயில்வேக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.50 (ரூ.4) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த மின்சார கட்டண உயர்வு நாளை (ஏப்ரல் 1ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. 31.3.2013 வரை இந்த கட்டண உயர்வு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். 

நன்றி;தினத்தந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக