வியாழன், 15 மார்ச், 2012

பண்டிகை என்ற பெயரில்உணவுப் பொருளைப் பாழாக்குவது சரியா?



ஹோலி பண்டிகை வட இந்தியாவில் விமரிசையாக ஒரு குறிப்பிட்ட மதத்தவரால் கொண்டாடப்படுகிறது. நாளடைவில் சென்னையில் வட இந்தியர்களின் குடியேற்றம் ஏற்பட்டவுடன் ஹோலி சென்னையையும் சேர்த்துக் கொண்டது. ஹோலி பண்டிகை அன்று வண்ணப் பொடிகளை ஒருவரின் மீது ஒருவர் வீசி விளையாடி மகிழ்வர். இந்த நாளில் இளைஞர்கள் இளம் யுவதிகள் மீது வண்ணப்பொடிகளை தடவுகிறேன் என்ற பெயரில் லேசாக வரம்பு மீறினாலும் அது பண்டிகை என்று பாராமுகமாக விடப்படுவதையும் நாம் சில இடங்களில் காண முடிகிறது. மேலும், இந்த வண்ணப் பொடிகளில் கலக்கப்பட்டுள்ள ரசாயனம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தன்மையுடையது என்று மருத்துவத்துறை சார்ந்த ஆன்றோர்கள் சொன்னாலும் அவை கண்டுகொள்ளப்படவில்லை. 

இந்நிலையில், இந்த ஆண்டு மும்பை தாராவி பகுதியில் நடந்த இக்கொண்டாட்டத்தில் விஷத்தன்மை உள்ள ரசாயனப் பொடிகளைத் தூவி விளையாடியதில் 144 பேருக்கு அரிப்பு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் 9-10 வயதுடைய சிறுவர்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன. மேலும், இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் வழக்கத்திற்கு மாற்றமாக தக்காளிகளை குவித்து அதில், இளைஞர்கள்-யுவதிகள் உருண்டு விளையாடிய சம்பவங்களும் நடந்தேறியுள்ளது. பண்டிகை என்ற பெயரில் உணவுப்பொருளை வீணாக்குவது எந்தவையில் பகுத்தறிவுக்கு ஏற்புடையது என்று தெரியவில்லை. பண்டிகை என்பது வெறுமனே மகிழ்ச்சி சம்மந்தப்பட்டதாக இருந்தால் மட்டும் போதாது; அங்கே அந்த பண்டிகை அறிவுக்கு பொருந்துவதோடு அர்த்தமுள்ளதாகவும் இருக்கவேண்டும் என்பதை கொண்டாடுபவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

படம் நன்றி; தினத்தந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக