திங்கள், 5 மார்ச், 2012

அபகரிப்பு ஜமாஅத்தின் அடுத்த மோசடி; ஹனபி பள்ளிவாசல் இடம் அபகரிப்பு; மீட்டெடுக்கும் பணியில் ஐ.என்.டி.ஜே.

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் ஹனபி மற்றும் ஷாபி ஜமாஅத் சார்பாக 58 சென்ட் நிலம் வாங்க ஜமாத்கள் இரண்டும் பணம் போட்டு 9.12.2005  அன்று அதன் தலைவர்கள் பெயரில் பதிவு செய்யப் பட்டது.ஹனபி ஜாமத்தின் அப்போதைய  தலைவர் ஜலாலுதீன் பெயரில் பதிவு செய்யப் பட்ட நிலையில் 2009 ஆண்டு ஜலாலுதின் மரணித்து விடவே அவரது மகனும் த.த.ஜ.வின் கிளை நிர்வாகியான அவரது மகன் மேற்படி நிலத்தை த.த.ஜ.விற்கு எழுதிக் கொடுத்து விட்டார். 

இதை அறிந்த ஹனபி ஜமாஅத் நிர்வாகிகள் அந்த குடுமபதரிடம் சென்று கேட்டதற்கு அது எங்கள் தந்தை இடம் எனக் கூற , ஜமாஅத் நிர்வாகிகள் அந்த இடத்தை வாங்க போட்ட ஜமாஅத் தீர்மானம், பணம் கொடுத்த வரவு செலவு கணக்கு அனைத்தையும் த,த,ஜ. மாவட்ட நிர்வாகத்திடம் காட்டி நியாயம் கேட்க 'இடத்தை நாங்கள் வாங்கியுள்ளோம் எங்களுக்கு தமிழகம் முழுதும் 500 கோடிக்கு சொத்து உள்ளது, தொண்டர் பலம் உள்ளது, நீங்கள் எங்கு சென்றாலும் ஒன்னும் முடியாது என்று சொல்ல மாநிலத் தலைமையிடம் கொண்டு சென்று நீதி கேப்போம் என்றால் அங்கேயும் அதே பதிலை தந்து,  முழுக்க முழுக்க அமானித மோசடிக்கு துணை நின்று அண்ணன் ஜமாஅத் அபகரிப்பு ஜமாஅத் என மீண்டும் நிருபித்துள்ளது.  

இந்நிலையில் காவல்துறைக்கு சென்று அங்கும் நீதி கிடைக்காமல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகத்தை அணுகி இந்த அநியாயத்தை நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும் இதற்கென நாங்கள் ஏற்பாடு செய்யம் கூட்டத்தில் நீங்கள் வந்து பேச வேண்டும் என அழைப்பு விடுத்ததை அடுத்து நேற்று 4.3.12 மாபெரும் விளக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்தக் கூட்டத்தில் எஸ்.எம்.பாக்கர் மற்றும் செங்கிஸ் கான் முஹம்மத் முஹய்யிதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். 

தங்களது உரையில் இது ஒரு மிகப் பெரிய அமானித மோசடி அல்லாஹ்வின் பள்ளிக்கு வாங்கப்பட்ட இந்த சொத்தை இடையில் புகுந்து வாங்குவது மார்க்க அடிப்படையில் குற்றம் என்பதையும், சம்பந்தப்பட்டவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி இதை உடனடியாக ஹனபி ஜமாஅத்திடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இப்பிரச்சனையை கையில் எடுத்து மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்தும் என அறிவித்தனர்
நரிப்பையூர் ஹனபி ஜமாஅத் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் கிளை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.   

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான்.
இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்.
நூல்;புகாரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக