சனி, 31 மார்ச், 2012

குவைத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற அணுஉலை எதிர்ப்புக் கருத்தரங்கம்!

சத்தியத்தில் உறுதியாய்....சமூகத்தில் இணக்கமாய்....என்ற தாரக மந்திரத்துடன் குர்'ஆன்-சுன்னா வழிகாட்டுதல் அடிப்படையில் அனைத்துப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்திவரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக, மக்களின் நலனுக்கு எதிரான அணுஉலைக்கு எதிராக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு, 30 -3 -2012 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6:30 மணிக்கு குவைத் மிர்காப் பகுதியில் அமைந்துள்ள மன்னுசல்வா உணவகத்தின் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு குவைத் மண்டலத்தலைவர் முகவை அப்பாஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, அன்வர் பாஷா அவர்கள் வரவேற்புரை வழங்க, மதிமுகவின் தமிழர் மறுமலர்ச்சிப் பேரவையின் தோழர்கள்  சத்தியன் ,ராவணன்,விஜயன் , தமிழ்நேசன் விழிப்புணர்வுக் கையேடு ஆசிரியர் சகோதரர். அ.அமானுல்லாஹ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாய்மண் கலை இலக்கியப் பேரவை தோழர் : அன்பரசன் , குவைத் தமிழர் கூட்டமைப்பு தோழர் செந்தில்குமார் , தமுமுகவின் சார்பாக மருத்துவர் அலி ஆகியோர் அணுஉலைக்கு எதிரான தங்களின் கருத்துக்களை பதிவு செய்தார்கள். மருத்துவ ரீதியாக, அறிவியல் ரீதியாக, தொழில் நுட்ப ரீதியாக அணுஉலையின் பாதகங்களை அலசப்பட்டது. அதோடு, கூடங்குளம் திறந்தால் தமிழகம் ஒளிரும் என்ற விசமப்பிரச்சாரத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. 

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கருத்துக் கேட்பு படிவம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்து கேட்கப்பட்டது.  கூடங்குளம் அணுஉலை அவசியம் என்று கருதியவர்கள் கூட இந்த கருத்தரங்கம் வாயிலாக தெளிவடைந்ததாக சிலர் கருத்து தெரிவித்திருத்தனர்.  ஒரு இஸ்லாமிய அமைப்பு பொதுவான ஒரு மக்கள் நலப் பிரச்சினையை கையிலெடுத்து களமிறங்கியதை பாராட்டியிருந்தனர். இறுதியாக மண்டலச் செயலாளர் சாதிக்சதாம் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக