ஞாயிறு, 18 மார்ச், 2012

மீண்டும் இந்தியா வர முயற்சிக்கும் 'சாத்தான்'ருஷ்டிக்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு!

 
சாத்தானின் கவிதைகள் என்ற நூல் எழுதிய சல்மான் ருஷ்டி எனும் 'சாத்தான்'ருஷ்டி, ஒரு  மாதம் முன்பாக,   ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூ  ரில் நடந்த இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு முஸ்லிம்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக, அவரது ஜெய்ப்பூர் வருகை ரத்து செய்யப்பட ஒடி மறைந்தார் ருஷ்டி.

இந்நிலையில், இன்று [மார்ச். 18 ]டெல்லியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டு பேசுகிறார் என்ற தகவலறிந்த முஸ்லிம்கள்,அவரது டெல்லி வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லி ஜும்மா மசூதியில் தொழுகைக்கு பின்பு, வாசலில் கூடி நின்று முஸ்லிம்கள் சல்மான்ருஷ்டிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் சல்மான் ருஷ்டியை பங்கேற்க அனுமதிக்க வேண் டாம் என்றும், நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சல்மான் ருஷ்டி பங்கேற்பதில் மாற்றம் எதுவும் இல்லாததால், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நிகழ்ச்சி நடக்கும் தாஜ் பேலஸ் ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சல்மான்ருஷ்டி கலந்து கொள்வதால், அவர் பங்கேற்க மறுத்து டெல்லி வருகையை ரத்து செய்து விட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த சாத்தான் ருஷ்டி வருகையினால் இந்தியாவிற்கு எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை. மேலும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த சாத்தான் ருஷ்டி மீதான முஸ்லிம்களின் கோபம் தணியப்போவதில்லை. ஏனெனில் இந்த சாத்தான் ருஷ்டி, முஸ்லிம் சமுதாயத்தை இழிவு படுத்தியிருந்தால் கூட முஸ்லிம்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உலக முஸ்லிம்களின் வேதம் மட்டுமல்ல; உலகப் பொதுமறையான குர்'ஆனை இழிவு படுத்தி, அந்த குர்'ஆனை கொண்டுவந்த முஸ்லிம்களின் உயிரினும் மேலான தலைவர் நபி [ஸல்] அவர்களை இழிவுபடுத்தி, உலகமுஸ்லிம்களின் அன்னையர்களை இழிவுபடுத்திய இந்த சாத்தான் ருஷ்டியை ஒருபோதும் உண்மை முஸ்லிம்கள் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது. அதனால்தான் இந்த சாத்தான் ருஷ்டி எப்போது இந்தியா வருவதாக இருந்தாலும் கொதித்தெழுகிறார்கள் முஸ்லிம்கள். இதை மத்திய மாநில அரசுகள் கண்கூடாக கண்டும், சில நேரங்களில் ருஷ்டியின் வருகைக்கு தடை விதிப்பதும், பிறகு சில நாட்களில் மாதங்களில் மீண்டும் அனுமதிக்க முயற்சிப்பதும் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கையாகும். சமீபத்தில் ஜெய்ப்பூரில் ருஷ்டிக்கு தடைவிதித்ததற்கு உ.பி.தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குவங்கியே காரணம் என்று சிலரால் குற்றம் சாட்டப்பட்டது. உ.பி. தேர்தலில் முஸ்லிம்கள் காங்கிரஸை புறக்கணித்துள்ள நிலையில், ருஷ்டிக்கு மீண்டும் அனுமதி என்பது மத்திய காங்கிரஸ் அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையோ என எண்ணத் தோன்றுகிறது.  இதுதான் உண்மையாக இருக்கும் பட்சத்தில் உ.பி.யில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட படுதோல்வி மத்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் இறைவன் நாடினால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக