வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012
அன்புள்ள முதல்வருக்கு....
வங்கதேச வாக்காளர்களை காட்டத் தயாரா? ராஜ்தாக்கரேயிக்கு ஆஸ்மி சவால்.
விலைவாசி உயர்வு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது; மத்திய அமைச்சரின் மடத்தனமான பேச்சு!
உளவுத்துறையா..? உளரும் துறையா...??
நமது நாட்டில் இரண்டு துறையினர் தரும் தகவல்களை எதிர்மறையாகத்தான் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒன்று வானிலை ஆராய்ச்சித் துறை. மற்றொன்று உளவுத்துறை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தால் அந்த இடத்தில் வெயிலடிக்கும். அல்லது சிறு தூறலோடு நின்றுவிடும். அதே போல உளவுத்துறை தகவலும் அப்படித்தான். ஒரு மதப்பண்டிகை வந்துவிடக் கூடாது; உடனே பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி என்று உளவுத்துறை தகவல் தரும். ஒரு டிசம்பர் ஆறு வந்துவிடக்கூடாது; உடனே கோயில்கள் மீது தாக்குதல் நடத்த சதி என்று உளவுத்துறை சொல்லும். சுதந்திர தினம் குடியரசுத் தினம் வந்துவிட்டால் உடனே பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் என்று சொல்லும். உளவுத்துறையின் இந்த செய்தி உண்மையா? பொய்யா? என்று கூட ஆராயாமல் வலிந்து கொண்டு பக்கம் பக்கமாக வெளியிட்டு ஊடகங்கள் காசு பார்க்கும். ஆனால் உண்மை என்னவோ நேர்மாறாகத் தான் இருக்கும். ''நடக்கும் என்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்து விடும்' என்ற பாடலைப் போல, உளவுத்துறை நடக்கும் என்றால் எதுவுமே நடக்காது என்பதைத்தான் இதுவரை காலம் சொல்லும் சான்றாக உள்ளது. எப்போதெல்லாம் பயங்கரவாதிகள் சதி என்று உளவுத்துறை சொல்லியதோ அப்போதெல்லாம் நாடு அமைதியாகவே இருந்திருக்கிறது. ஆனால் உளவுத்துறை எச்சரிக்காத நாளில் நாட்டில் அசம்பாவிதங்கள் நடந்துள்ளது.
ஒரு பயங்கரவாத செயலைச் செய்ய நினைக்கும் ஒருவன், கடுமையான சோதனைகளும் கட்டுப்பாடுகளும் மிக்க சுதந்திர தினம்-குடியரசு தினம்-பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் போன்ற நாளையா தேர்ந்தெடுப்பான் என்ற சாதாரண அறிவு கூட உளவுத்துறைக்கும் இல்லை. உளவுத்துறையை மிஞ்சிய உளவுத்துறையாக செயல்படும் பத்திரிக்கைகளுக்கும் இல்லை. உளவுத்துறையின் குருட்டுத்தனமான அறிவிப்புகளால் சோதனை என்ற பெயரில் மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் சோதனை என்ற பெயரில் செய்யப்படும் கெடுபிடிகளால் அந்த நாள் ஏன் தான் வருகிறதோ என்று மக்கள் நினைப்பதற்கும், அந்த நாளோடு சம்மந்தப்பட்ட மதத்தினர் மீது வெறுப்புணர்வு கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாக ஆவதற்கும் காரணம் உளவுத்துறையின் உருப்படியில்லாத தகவல்கள் தான். இதை நாம் சொல்லவில்லை மாநில அரசுகள் சொல்லியுள்ளன.
ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டம், சமீபத்தில் டில்லியில் நடந்தது. இதில், பேசிய மாநில அரசு அதிகாரிகள் கூறியதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தியில்,
''உளவு நிறுவனங்கள் தரும் தகவல்களை நம்பி, மாநிலங்களில் பாதுகாப்பு பணிக்கென அதிகளவில் ஆட்களை நியமிக்க நேரிடுகிறது. ஏற்கனவே, சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக, நிறைய பாதுகாப்பு படையினரும் பல்வேறு இடங்களில் பணி அமர்த்தப்படுகின்றனர்.உளவு நிறுவனங்களின் தகவல்கள் உறுதியற்றதாக இருக்கும் போது, பாதுகாப்புப் படையினருக்கு பணிச் சுமை அதிகரிப்பதோடு, அரசுக்கும் செலவு ஏற்படுகிறது. பொதுமக்களும் சோதனை என்ற பெயரில், பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே, இனி மேலாவது அரை குறை தகவல்களைத் தெரிவிப்பதை, மத்திய உளவு நிறுவனங்கள் கைவிட வேண்டும்' இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இனிமேலாவது உளவுத்துறை ஒழுங்காக உளவறிந்து தகவல்களை பரிமாறட்டும். ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து அந்த நாளில் எதையேனும் சொல்லி பரபரப்பை உண்டாக்குவதை விட, ஒழுங்காக உளவறிந்திருக்குமானால் நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புகளை தடுத்திருக்க முடியும் என்பதுதான் உளவுத்துறை பற்றி மக்கள் கருத்தாக உள்ளது. மேலும் மக்களுக்கு உண்மையை சொல்லவேண்டிய பத்திரிக்கைகள் பொய்யான தகவல்களை முதல்பக்கத்தில் வெளியிட்டு மக்களுக்கு பீதியை உண்டாக்கி காசு பார்ப்பதை நிறுத்த வேண்டும். இல்லையேல் பத்திரிக்கை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று என்ற நம்பிக்கையை சிதைத்து விடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அசாம் கலவரம் தொடர்பான தவறான தகவலை அனுப்பி மக்களை பீதிக்குள்ளாக்கும் செயலை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததை போன்று, மக்களுக்கு அறிமுகமான பதற்றமான நாளில் மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் பொய்யான தகவலை பரப்பும் பத்திரிக்கைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக் மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும்.
வதந்''தீ''யை வாந்தி எடுக்கும் வழிகேடர்கள்!
தீயை விட வேகமாக பரவுவது வதந்''தீ'' என்று சொன்னால் மிகையல்ல; வடமாநில மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் குறுஞ்செய்திகள் பரவுவதாக கூறிய மத்திய அரசு, ஒரு நாளைக்கு ஒரு நம்பரிலிருந்து ஐந்து எஸ்.எம்.எஸ்.கள் மட்டுமே அனுப்பவேண்டும் என்ற தடையை கொண்டுவந்தது. இதனால் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு பல கோடிகள் நஷ்டமாக அடுத்த சில தினங்களில் தனது பிடியை தளர்த்தியது மத்திய அரசு. இந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளாக மெஹந்தி அணிந்த பெண்கள் சிலர் இறந்துவிட்டார்கள் என்றும் பலர் கவலைக்கிடமாக உள்ளார்கள் என்றும் வதந்தி பரவ, மெஹந்தி அணிந்த பெண்கள் குழந்தைகள் என ஊர்கள் தோறும் மருத்துவமனையை முற்றுகையிட பரபரப்பு உண்டானது. இந்த வதந்தி பொய் என்று ஆன அடுத்த சில நாட்களிலேயே அடுத்த வதந்தி அவதாரம் எடுத்து விட்டது.
பிறந்தவுடன் பேசிய குழந்தை, "நான் சிறிது நேரத்தில் இறந்து விடுவேன்; எனக்கு பிடித்த குழந்தைகளையும் அழைத்துச் செல்வேன்' என்று சொன்னதாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் வதந்தி பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களில், மக்கள் மத்தியில், அதிகாலை, 2 மணியில் இருந்து, எஸ்.எம்.எஸ்., மூலம் இந்த செய்தி பரப்பப்பட்டது.
இந்த செய்தி வந்த மாத்திரமே அது உண்மையா? பொய்யா? என்பதையெல்லாம் அறிய முற்படாத மக்கள் உடனடியாக பிறந்த குழந்தை சொன்ன தீமையிலிருந்து தங்கள் குழந்தையை பாதுகாக்க பரிகாரம் தேடக் கிளம்பிவிட்டனர். தங்கள் குழந்தைகளின் தலையில் தேங்காய் சுற்றி, திருஷ்டி கழித்து, ஆரத்தி எடுத்தனர். சிலர், மஞ்சள் நீரில் மிளகாய் வத்தல், கரி ஆகியவற்றை வைத்து, திருஷ்டி சுற்றி, முச்சந்திகளில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பரிகாரம் செய்தனர்.
இந்த செய்தி தமிழகம் தாண்டி ஆந்திர மாநிலம், ஐதராபாத், நிஜாமாபாத், கரீம் நகர், வாராங்கல் மாவட்டங்களிலும், இந்த வதந்தி வேகமாக பரவியது. அங்கே இந்த செய்தி போகும் போது வேறு வடிவம் எடுத்து விட்டதாம். பல கை, பல கால்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது பிறந்த உடனேயே, தன் தாயிடம், "இன்னும் சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்; அதற்கு முன், இன்று இரவு என்னுடன் பிறந்துள்ள அனைத்துக் குழந்தைகளையும் பலி வாங்கி அழைத்துச் சென்று விடுவேன்' என்று கூறியதாக வதந்தி பரவியதாம். ஆம். உண்மைக்கு ஒரு முகம்; பொய்க்கு பல வடிவம் தானே.
ஒரு திரைப்படத்தில் காமெடி நடிகர் தனது சாமிக்கு தேங்காய் உடைக்க தேங்காய் கடைக்காரரிடம் விலை கேட்க, அவர் சொல்லும் விலை பயங்கரமாக இருந்ததால் ஒரு திட்டம் தீட்டி, ''நேற்று வந்த தேங்காய் லோடுல ஏதோ ஒரு தேங்காய்ல யாரோ பாம்(வெடிகுண்டு) வச்சுட்டாங்களாம்; அது எந்த தேங்காய்ன்னு தெரியல'ன்னு ஒரு வதந்தியை பரப்புவார். அதை நம்பிய மக்கள் பதறியடித்துக் கொண்டு தேங்காய் வாங்குவதை நிறுத்த, வதந்தி பரப்பிய காமெடி நடிகர் தேங்காய் கடைக்காரரிடம், ''பார்த்தாயா? நான் ஒரு தேங்காய் கேட்டேன்; நீ யானை விலை சொன்ன; நான் ஒரு பொய்யச் சொன்னேன்; மக்கள் தேங்காய் வாங்காம ஓடிட்டாங்க. இப்ப எல்லாத் தேங்காயையும் நீ வீட்டுக்கு கொண்டுபோய் சட்னி வச்சு சாப்பிடு' என்பார். அதுபோலத்தான் இந்த பிறந்த குழந்தையின் பேச்சும் அதையொட்டி பரிகராமாக தேங்காய் உடைப்பும் நடந்ததை பார்க்கும் போது இந்த வதந்திக்கும் தேங்காய் வியாபாரத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோன்னு மக்களுக்கு சந்தேகம் வருவதில் வியப்பில்லை. ஏனென்றால் வதந்திகளுக்கும் வியாபாரத்திற்கும் எப்போதும் தொடர்பு உண்டு. திடீரென்று ஆண்களுக்கு ஆபத்து; அதில் இருந்து காக்கும் பரிகாரமாக தனது சகோதரிக்கு பச்சைக் கலர் சேலை வாங்கித் தரவேண்டும் என்று வதந்தி கிளம்ப நம்ம ஆம்பளைகள் எல்லாம் பச்சைக்கலர் சேலை தேடி அலைந்த காட்சிகளும் தமிழகத்தில் நடந்ததுதானே.
இது மட்டுமா? அம்மன் கண்ணில் நீர் வழிகிறது, புள்ளையார் பால் குடித்தார், ஏசுவின் பாதத்தில் நீர் வடிகிறது, அண்டா தண்ணீரில் அம்மனின் முகம் தெரிகிறது, பாம்பு ஒளிர்கிறது, பட்டப் பகலில் ஆவி வலம் வருகிறது இப்படியாக அடுக்க்கடுக்கான வதந்திகள் அணிவகுத்ததையும் அதை கொஞ்சமும் அறிவின்றி மக்கள் நம்பியதையும் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த வரிசையில் வந்த ஒன்றுதான் இந்த குழந்தையின் பேச்சும் அதையொட்டிய களேபரங்களும் என்பதை சொல்லிக் கொள்வதோடு வதந்தி பற்றி இஸ்லாம் எண்ணற்ற அறிவுரைகளை வழங்கியுள்ளது அதில் ஒன்றைப் பார்ப்போம்;
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
(அல் குர்'ஆன் 49:6 )
சனி, 25 ஆகஸ்ட், 2012
மக்களின் மன ஓட்டத்தை பிரதிபலித்த மம்தா பானர்ஜி!
புதன், 22 ஆகஸ்ட், 2012
செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012
இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்பு; மன்னிக்கும் குணம் இருக்கிறதா? உங்களுக்கு இதயநோய் வராது: ஆய்வில் தகவல்.
அல்லாஹ் கூறுகிறான் :
(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள். அல்குர்ஆன் 3 : 134
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கோபம் கொள்ளாதே ! எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் உபதேசம் செய்யுங்கள் எனக்கூறவே, மீண்டும் கோபம் கொள்ளாதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
வீரன் என்பவன் கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான் என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். நூல்கள் : புகாரி , முஸ்லிம்
நமக்கு தீமை செய்தவர்களை பழிவாங்கவேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனிதர்களின் மனதிற்கும், உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
200 பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் நூறு பேரிடம் உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்?, அவரை எப்படி பழிவாங்குவதுபோல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மீதமுள்ள நூறு பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அய்ந்து நிமிடம் கழித்து அதே சம்பவங்களை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட நூறு பேரின் ரத்தம் அளவிற்கு அதிகமாக வேகமாக பாய்ந்தது. மறப்போம், மன்னிப்போம் கொள்கையை கொண்ட நூறு பேரின் ரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருந்ததும் தெரிய வந்தது.
இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைமைப் பேராசிரியர் மருத்துவர் பிரிட்டா லார்சன், மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் ரத்த அழுத்தம் ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பை சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்த கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம். அதேசமயம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அது பலம் அடைந்ததும் சோதனையில் தெரிந்தது. இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்'' என்று கூறியுள்ளார்.
இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எண்ணம் போல் வாழ்வு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மை செய்வதையே நினையுங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
நன்றி; விடுதலை 21 -8 -12
சனி, 18 ஆகஸ்ட், 2012
நான் சந்தித்த சதிகள்! - ஆச்சார்யா ஸ்பெஷல் பேட்டி




நோன்பு பெருநாள் சிந்தனை !!!
|
இனிய பெருநாளே.... ஈகைத் திருநாளே...!
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள். |

புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று கொண்டாடும், கொண்டாடவிருக்கும் சகோதர- சகோதரிகளே!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012
வாக்கு'வாதம்'...!
தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம் எழுப்பப்படும். மேலும் எவர் நற்பண்புகள் உள்ளவராக இருக்கின்றாரோ அவருக்குச் சுவனபதியின் மேலே ஓர் இல்லம் நிர்மாணிக்ப்படும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமாرَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: திர்மதீ
அல்குர்ஆனில் வீண் தர்க்கம் செய்வது நிராகரிப்பாகும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: அபூதாவூத்
நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரேயாவர் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஆயிஷாرَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ
நாங்கள் விதி பற்றி தர்க்கம் செய்து கொண்டிருக்கும்பொழுது நபி صلى الله عليه وسلم அவர்கள் வந்தார்கள். (இதனைக் கண்ட) அவர்கள் மாதுளம் சுளைகளை அவர்களுடைய முகத்தில் பதித்து விட்டதைப் போன்று அவர்களுடைய முகம் சிவப்பாகும் வரை சினமுற்றனர். அப்பொழுது அவர்கள் 'இது கொண்டா கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்? இதற்குத்தானா நான் உங்களிடம் தூதுவனாக அனுப்பப்பட்டேன்? நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தோர் தங்களின் மார்க்க விஷயத்தில் அதிகமாக தர்க்கம் செய்ததன் காரணமாகவும், தங்களின் நபிமார்களுடன் மாறுபட்டதன் காரணமாகவும் தான் அழிந்தனர் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: திர்மிதீ
ஒரு தடவை நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களின் தோழர்களுடன் அமர்ந்திருந்தனர். (அப்பொழுது) திடீரென ஒருவன் வந்து அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மீது வசைமாரி பொழிந்து அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஆனால் அவர்களோ ஏதும் கூறாமல் வாய் மூடி இருந்தனர். பின்னர் அவன் மறு முறையும் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஏனினும் அவர்கள் ஏதும் கூறவில்லை. மீண்டும் அவன் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய பொழுது அவனுக்கு பதில் கூறினர். உடனே நபி صلى الله عليه وسلم அவர்கள் எழுந்து விட்டனர். அப்பொழுது அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள், தாங்கள் என்மீது சினமுற்று விட்டீர்களா? என்று வினவினர். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், அல்ல; எனினும் விண்ணிலிருந்து ஓர் வானவர் இறங்கி வந்து தங்களைப்பற்றி கூறிய வசைகளையெல்லாம் பொய்யாக்கி கொண்டிருந்தார். ஆனால் தாங்கள் பதில் கூறியதும் அந்த வானவர் சென்று விட்டார். எனினும் ஷைத்தான் (அவருடைய) இடத்தில் அமர்ந்து கொண்டான்; ஆதலின் ஷைத்தான் அங்கு அமர்ந்தபின் நான் அமர்ந்திருத்தல் தகாது' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுல் முஸையப் رَضِيَ اللَّهُ عَنْهُ அதாரம்: அபூதாவூத்
Best regards,
Abdul Gani
அகதிகள் பற்றி அத்வானி பேசுவதா?

புதன், 15 ஆகஸ்ட், 2012
கண்ணியமான சமுதாயத்தை ஒரு குற்றவாளியாக நிற்பவர் வழிநடத்துவதா?
காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிமீது கொலைக் குற்றம் இருந்தும், காமவெறியர் என்று மக்களால் தூற்றப்பட்டும்கூட அவருக்கு 76 ஆம் ஆண்டு பிறந்த நாளை ஜெயந்தியை வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆசாமியும் கொஞ்சமும் லஜ்ஜையின்றி ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்.
சங்கை கெட்டுப் போன சங்கராச்சாரியாரை பார்ப்பனர்கள் தூற்றுவதில்லை; விட்டுக் கொடுப்பதில்லை. காரணம் இனவுணர்வுதான். தமிழர்களின் நிலை என்ன?
உண்டகலத்தில் ரெண்டுக்குப் போகும் மனிதர்கள் தானே!(தந்தை பெரியார் கூறிய உவமை இது.) நான் யார் தெரியுமா?
இதோ காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பேசுகிறார்:
1) என்மீதுள்ள வழக்குகள் குற்றப்பிரிவு 302, 120பி,34, 201 ஆகிய பிரிவுகள் கொலை செய்யத் தூண்டுதல் கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை இந்தப் பிரிவுகளில் என்னைக் கைது செய்துள்ளனர். (11.11.2004). என்மீதுள்ள முக்கிய குற்றச்சாற்று. காஞ் சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் ஆனந்த சர்மா மகன் சங்கரராமனைக் கொலை செய்தது. (3.9.2004)
2) என்மீதுள்ள இன்னொரு குற்றச்சாற்று சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது (இ.பி.கோ. 120பி, 307).
3) மற்றொரு குற்றச்சாற்றும் உண்டு. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது (31.8.2004) நெல்லை மாவட்டம் திருக்கருக்குடி பெருமாள் கோயிலில் இருந்த சிவன் கோயிலை நான் இடித்தேன். இடித்தது தவறு என்றுகூறி இந்த மாதவன் மறுபடியும் சிவன் கோயிலைக் கட்ட முயற்சி செய்தான். அதனால் மாதவனைத் தாக்கியது.
4) 1987இல் (23.8.1987) காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக தண்டத்தை விட்டு விட்டு தலைக் காவேரிக்கு ஓடினேன் (நேபாள பெண்மணி ஒருவருடன்)
5) தண்டத்தை மடத்தில் விட்டு விட்டு ஓடியதால் மடத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாகி விட்டது. காமத்தைத் துறந்த நிலையிலிருந்து விடுபட்டு, காதல் உலகில் சஞ்சரித்ததாக இதன் பொருள். நான் தண்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு மடத்தைவிட்டு ஓடியதால், காஞ்சிப் பெரியவாள் அவசர அவசரமாக விஜயேந்திரனுக்கு அடுத்த பட்டத்தைச் சூட்டி விட்டார்.
6) அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் முயற்சியால் மீண்டும் காஞ்சி மடத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். தண்டத்தைத் துறந்து மடத்தைவிட்டு நான் வெளியேறி விட்டதால், மடத்துக்கும் எனக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை என்று சொன்னதை மகா பெரியவாள் கடைசி வரை வாபஸ் வாங்கவேயில்லை. ஆனாலும் விவஸ்தைகெட்டு மடத்தில் இருந்தேன் இருக்கிறேன். 7) என்மீது வேறு குற்றச்சாற்றுகளும் உண்டு.
திருப்பதி தோமலை சேவையின்போது குலசேகரன் படியில் அமர்ந்து ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணி) அர்ச்சனை செய்தேன். கோயில் அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தெரிந்தும் அதனைச் செய்தேன். அர்ச்சகர் என்னைத் தடுத்தார்; நான் அதைச் சிறிதும் சட்டை செய்யவேயில்லை. (3.11.2000). 8) பெண் விஷயத்திலும் என்மீது ஏகப்பட்ட புகார்கள். இந்த வகையில் பிரேமானந்தா. நித்யானந்தாக்களுக்கு முன்னோடி நான். அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து நான் இழுத்ததாக டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக எடுத்துக்கூறி என் மானத்தைக் கப்பலேற்றிவிட்டார்.
9) திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் செய்து அணிவித்தேன் (5.4.2002) இதன் மூலம் கடவுளையும் என் பிராமண ஜாதிக்குள் கொண்டு வந்து விட்டேன்.
10) தாம்ப்ராஸ் என்னும் பார்ப்பன சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்ட அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் கடவுளுக்கும் மேலே உயர்ந்தவன் பிராமணன் என்று பேசினேன் (9.10.2002). இதன்மூலம் என் ஜாதி ஆணவத்தை வெளிப்படுத்தினேன். (மும்மலத்தையும் அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் கடந்தவர்கள் தான் காமகோடி என்று சொல்லப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரை இவற்றிற்கு ஆட்பட்டவன் தான்).
11) மதுரை மாவட்டம் தும்பைப்பட்டிக்குச் சென்றேன், (10.11.2002). கக்கன் பிறந்த ஊர்அது. ஹரிஜன்கள் என்னைத் தொட்டு விடாதபடி தோளில் தொங்கிய துணியை எடுத்துக் காலில் சுற்றிக் கொண்டேன்.
இதன் மூலம் நான் தீண்டாமையை ஆதரிக்கும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டேன்.
12) எல்லா ஜாதியாருக்கும் ஒரே சுடுகாடு கூடாது என்ற கருத்தைச் சொன்னவன் நான் (விடுதலை 8.3.1982). இதனால் ஜாதி வெறியன் என்று தூற்றப்பட்டேன்.
13) பா.ஜ.க., ஆட்சியின் போது அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதற்கு எனது பாராட்டுதலை வெளிப் படையாகத் தெரிவித்தேன் (தினமணி 16.5.1998).
இதன் மூலம் உலகில் சாந்தம் தழைக்க வேண்டும் ஹானி நீடிக்கக் கூடாது என்கிற பொதுவான மனிதப் பண்புக்கு எதிரியாக அடையாளம் காட்டப்பட்டேன்.
14) ரஜினியுடன் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம் என்று விஜயகாந்துக்கு அட்வைஸ் செய்தேன்.
(குமுதம் 18.1.2001)
இதன் மூலம் ஒரு மதத் தலைவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உடைத்தவன் ஆனேன்.
15) அயோத்தியில் கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று கூறினேன் தினமணி (27.11.2000). இதன்மூலம் வன்முறைக்கு வித்திட்டவன்; சட்டத்தை மதிக்க மறப்பவன் என்று விமர்சிக்கப்பட்டேன்.
16) தமிழில் குடமுழுக்கு கூடாது என்றேன்.(இந்தியா டுடே 2.10.2002).
இதன் மூலம் தமிழ் நீஷப்பாஷை என்று என் குருநாதர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தில் உறுதியாக நான் இருந்ததால் தமிழர்களால் நான் தூற்றப்பட்டேன்.
17) பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றேன் (தி பயனீர் 17.3.1997)
பெண்களால், எதிர்க்கப்பட்டேன். விதவைப் பெண்களைத் தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டுப் பேட்டி அளித்தேன். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும் கூறினேன்.
மகளிர் உண்டு இல்லை என்று எதிர்ப்புச் சூட்டைக் கிளப்பினார்கள். தி.க. மகளிர் அணியினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டமே நடத்தினர் (9.3.1998).
18) கொலை செய்யப்பட்ட சங்கரராமன் என் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி விட்டான். எனது இன்னொரு பக்கமான ஆபாச நடவடிக்கைகளை எல்லாம் வண்டி வண்டியாக ஏற்றி விட்டான். (தனிப் பட்டியல் கீழே)
19) குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும்வரை மடத்தின் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் என்று துவாரகா பீடம் ஸ்வரூபானந்துகூட கூறினார். (தி இந்து 3.12.2004) நான் சட்டை செய்யவில்லையே! ஆனாலும் பார்த்தேளா, எனது 76ஆவது ஜெயந்தி விழா ஜாம்ஜாமென்று நடக்கிறது. பத்திரிகைகளில் எல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்கள்! பிராமணாள் ஒரு பக்கம் சூத்திராள் இன்னொரு பக்கம் ஜமாயிக்கிறார்கள். எவ்வளவு கேவலமாக எங்கள் நடத்தை இருந்தாலும் எங்களவாள் விட்டுக் கொடுக்க மாட்டவே மாட்டாள். இவ்வளவு நடந்திருக்கே... எங்க மனுஷாள் என்மீதோ, மடத்தின் மீதோ கரித்துக் கொட்டியதுண்டா?
உங்களவாள் மாதிரியா? உண்ட வீட்டுக்கே ரெண்டகம் என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை இல்லாத ஒன்று. ஆயிரம் பெரியார் தான் வரட்டுமே உங்களில் விபீஷணன்களை நாங்கள் உற்பத்தி செய்து கொண்டே இருப்போம்!
அந்தக் கைத்தடிகள் அனுமார்கள் இனாமாக எங்களுக்குக் கிடைக்கும் போது எங்களுக்கு ஏது பயம்?
ஹி... ஹி....
thankas ; viduthalai [minsaram 31-7-2010]
தகவல் நன்றி; முஹம்மது ரயீசுத்தீன்.