நன்றி; தினமணி 01 -04 -2011
வியாழன், 31 மார்ச், 2011
எதையெல்லாம் தாங்குவது?
ஏப்ரல்ஃபூல் ஒரு ஏகத்துவ பார்வை!
ஏப்ரல்ஃபூல் ஒரு ஏகத்துவ பார்வை!

இந்த முட்டாள்கள் தினம் என்றால், இல்லாததை சொல்லி மற்றவர்களை நம்பவைத்து அதில் மகிழ்ச்சி கொள்வது, அதாவது பொய்சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதுதான் இந்த தினத்தின் கொண்டாட்ட முறையாகும். தாய்க்கு போன்செய்து அவர்களின் ஒரேமகன் விபத்துக்குள்ளாகி, குறிப்பிட்ட மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறான் என்று சொல்லி அந்த தாயை தவிக்கவிடுவது; அலுவலகம் சென்ற கணவனை பற்றி மனைவியிடம் , 'ஒங்க வீட்டுக்காரரை ஒரு பொண்ணோட இப்பதான் பீச்சுல பாத்தேன் என்று சரடுவிட்டு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவது; இப்படி பல்வேறு வகையான பொய்கள் பல்வேறு பரிமாணத்தில் இந்த நாளில் அரங்கேறும் . இதில் வேடிக்கை என்னவெனில், அறிவுப்பூர்வமான மார்க்கத்துக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்களில் சிலரும் இந்த முட்டாள்கள் தினத்தை கொண்டாடுவதுதான். இந்த தினத்தின் மைய கருப்பொருளான பொய் பற்றி இஸ்லாம்;
நபி [ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பிருந்தே வாய்மையாளராகதிகழ்ந்துள்ளார்கள். எந்த அளவுக்கெனில், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத முஷ்ரிக்குகள் கூட நபியவர்கள் பொய் சொல்லக்கூடியவர் என்று சொன்னதில்லை. ஹெர்குலிஸ் மன்னனிடம் [அப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிராத] அபூசுப்யான்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை பற்றி கூறிய வாசகம் பாரீர்;
ஹெர்குலிஸ்; அவர் [நபிஸல்] இவ்வாறு[தூதரென்று] வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?
அபூ சுப்யான்;இல்லை.[ஹதீஸ் சுருக்கம்] நூல்;புஹாரி,எண் ;7
முஸ்லிமல்லாத மாற்றாரும் கூட வாய்மையாளர் என்று சான்று பகர்ந்த நம்தலைவரின் வழிவந்த நாம் முட்டாள்கள் தினத்தை கொண்டாட பொய் சொல்லலாமா?
நீங்கள் முஸ்லிமா? முனாஃபிக்கா?
வியாபாரத்திலும் பொய் கூடாது;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!"நூல்;புஹாரி
வியாபாரத்தில் கூட பொய் கூடாது எனில், இந்த உதவாத முட்டாள்கள் தின பொய் தேவையா?
எந்த நிலையிலும் பொய்யுரைக்காத சத்திய சகாபாக்கள்;
தபுக் யுத்தத்தில் கலந்துகொள்ளாதவர்களில் மூவர் தவிர மற்றவர்கள் சாக்குபோக்கு சொன்னவர்கள் மன்னிக்கப்பட, பொய் சொல்லவிரும்பாத கஅப் இப்னு மாலிக்(ரலி) ஹிலால்[ரலி], முராரா[ரலி] ஆகியோர் பொய்யுரைக்க விரும்பாததால், அவர்களுக்கு ஏற்பட்ட நிலை பற்றி கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாவது;
அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்துகொள்ளாதது குறித்து வினவியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (மற்றவர்களைப் போன்று) பொய்யுரைக்காமல் உண்மை பேசியதுதான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போன்று நானும் அழிந்து போயிருப்பேன்.
'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். (ஏனென்றால்) அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 09:95, 96) அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள். நூல்;புஹாரி,எண் 4673
மற்றொரு ஹதீஸில்;
அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததைவிட சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்தாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இறுதி நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான்.
'நிச்சயமாக அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்பவேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்களின் மீதும் (அருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினரின் இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்களின் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான்.' 'மேலும் எவருடைய விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாம் விட்டிருந்ததெனில்), பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறும் அவர்கள் உயிர் வாழ்வதே சிரமமாம் விட்டிருந்தது. இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவன் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாயிருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள்.(திருக்குர்ஆன் 09:117-119) நூல்; புஹாரி, எண் 4678
கஅப் இப்னு மாலிக்[ரலி] உள்ளிட்ட மூவர் பொய் சொல்லி அல்லாஹ்வின் தூதரிடம் தப்பித்திருக்கமுடியும், ஆனால் அல்லாஹ்வுக்கு அஞ்சிய காரணத்தால் பொய்சொல்வதில் இருந்து தங்களை காத்துக்கொண்டார்கள் என்றால், சகாபாக்களும் எம்மைப்போன்ற மனிதர்கள்தான் என்று வாய்கிழிய பேசும் நாம், இந்த பொய்யை மூலதனமாக கொண்ட முட்டாள்கள் தினத்தை கொண்டாடலாமா?
பொய்யர்களுக்கு தண்டனை;
ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நபி[ஸல்]அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள். ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது . பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் என்ன இது என்று கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்ட வரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.[ஹதீஸ் சுருக்கம்]நூல்;புஹாரி,
என்ன சகோதரர்களே! இம்மை/ மறுமையை பாழாக்கும் பொய்யும் , அதையொட்டிய இந்த முட்டாள்கள் தினமும் தேவையா? சிந்திப்பீர்!
தவறான தகவல் தந்தமைக்காக வருந்துகிறோம்
புதன், 30 மார்ச், 2011
முஸ்லிம் லீக்கும் பாமகவும் ஒன்றா?
தேர்தல் நேரம்; 'நோ' ஈழம்!
தேடிவந்த பட்டத்தை புறக்கணித்த தெண்டுல்கர்!
சிதறு தேங்காயுடன் சேர்ந்து சிதறிய திமுகவின் பகுத்தறிவு?
பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் படித்தவர், காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி, தமது அரசின் மருத்துவக் காப்பீடு குறித்த விளம்பரத்தில் எமதர்மர் உயிரைப் பறிப்பதைப் போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்தரித்து தன்னுடைய பகுத்தறிவு முகமூடியை தானே கிழித்துக் கொண்டு தன்னுடைய சுயரூபத்தை வெளிப்படுத்தியதும் மக்களுக்கு நினைவிருக்கலாம்.
குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் திமுகவினரையும், தீ மிதிக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களையும் அவ்வப்போது கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்து மதத்தினர் கடவுளென நம்புபவர்களை கொச்சைப் படுத்தியும், நிந்தித்தும் தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொண்டிருந்தார் கருணாநிதி. ஆனால் மஞ்சள் துண்டுக்கு மாறினார். அதற்கு வியாக்கியானமும் கொடுத்து மறைத்தார். மேலும், சாய்பாபாவுடனும்,அமிர்தானந்தமயியுடனும் மேடையில் காட்சிதந்து அருள்பாலித்தார்[?].அத்துடன் 'கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பதைவிட கடவுள் என்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய பணியை செய்கிறேனா என்பதுதான் முக்கியம்' என்று திருவாய் மலர்ந்தார்.
மேலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு புறவாசல் வழியாக சென்று விழாவில் கலந்து கொண்டதும் பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, மூன்று நாள் சுற்றுப் பயணமாக சென்னையிலிருந்து திருவாரூர் புறப்பட்டார் கருணாநிதி. பிரசார வேன் மூலம் திருவாரூர் புறப்பட கருணாநிதி வேனில் ஏறி அமர்ந்ததும், கோபாலபுரத்தில் அவர் வீட்டு முன் உள்ள வேணுகோபால்சாமி கோவிலுக்கு முன், சூறை தேங்காய்கள் உடைக்கப்பட்டன. இதற்காக, பிரசார வேன் சில நிமிடங்கள் நின்று, சூறை தேங்காய் உடைக்கப்பட்ட பின் புறப்பட்டு சென்றது.
'சில வேண்டுதல்கள் அடிப்படையில் தேங்காய் உடைப்பது இந்துமதத்தவரின் நம்பிக்கை. ஆனால் தன்னை நாத்திகன் என்று சொல்வதிலேயே ஆனந்தம் என்று கூறும் கருணாநிதி, தான் செல்வதற்கு முன்னால் தேங்காய் உடைத்ததை அனுமதித்தது எந்த நம்பிக்கையில் என்பதுதான் புரியாத புதிராகும்.
அடுத்து பிரச்சாரத்திற்கு செல்லும் தலைவரே தேங்காய் உடைத்து பக்திமயமாக செல்கையில், அவரது கட்சி வேட்பாளர் என்ன நினைத்தாரோ ஒரு சாமியாரின் காலில் சாஸ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்றுள்ளார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின், 50வது பட்டம் ஜீயராக ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமி உள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க., சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஆனந்த், தனது பரிவாரங்களுடன் ஜீயரை சந்தித்தபோது, திமுக வேட்பாளர் ஆனந்த், ஜீயர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இந்த தேர்தலில் போட்டியிடும் தன்னை வெற்றி பெற ஆசி வழங்கும்படி கேட்டுக் கொண்டார். "நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்' என, ஜீயர் ஆசி வழங்கினார்.
எல்லாம் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியோ? கி. வீரமணியார் கேட்டுச்சொன்னால் நல்லாருக்கும்.
சட்டங்களின் சலுகைகள் முஸ்லிம்களுக்கு எட்டாக்கனியோ..?
இந்தநிலையில் எனக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமண கொண்டாட்டங்களுக்காக எனக்கு ஒரு மாதம் பரோல் தர வேண்டும் என்று உள்துறை செயலாளர், டி.ஜி.பி., கோவை ஜெயில் சூப்பிரண்டு ஆகியோருக்கு எனது சகோதரர் கடந்த 1 ம் தேதி விண்ணப்பித்தார். எனக்கு பரோல் கொடுக்கும் பட்சத்தில்தான் திருமணம் நடக்கும். இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.
- கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சாமியார் பிரேமானந்தாவுக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கிய நீதிமன்றம்.
- இதே பிரேமானந்தாவுக்கு சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்ள இவருக்கு 6 நாட்கள் பரோலில் விடுதலை.
- மதவெறியை தூண்டும் வகையில் தேர்தல் நேரத்தில் பேசிய வருண் காந்திக்கு 15 நாட்கள் பரோலில் விடுதலை செய்த உச்சநீதிமன்றம்.
- முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனனை சுட்டுக்கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அவரது சகோதரர் பிரவீன் மகாஜன் 14 நாள் பரோலில் விடுதலை செய்த மும்பை நீதிமன்றம்.
இவ்வாறு பட்டியல்கள் நீளும். ஏற்கனவே மதானிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுப்பதன் மூலம் அநீதியை காட்டிவரும் நீதித்துறை, இப்போது இந்த வழக்கில் குறைந்த நாள் பரோல் வழங்கி தனது அநீதியை தொடர்கிறது. என்ன செய்வது! சட்டத்தின் சலுகைகள் முஸ்லிம்களுக்கு எப்போதுமே எட்டாக்கனிதானே!
ஜப்பான் பொருட்கள்; சவூதியை கிண்டலடிக்கும் தினமலர்!
அண்டை நாட்டில் ஏற்படும், நோய் அல்லது வேறு விதமான பாதிப்புகள் தனது நாட்டு மக்களுக்கும் பரவிவிடக் கூடாது என்று கவலை கொள்வதும், அதற்க்காக முன்னேற்பாடுகளை செய்து கொள்வதும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு நாடும் செய்து வரும் நடைமுறையாகும். சமீபத்தில் வெளிநாடுகளில் பன்றிக்காய்ச்சல் பரவியபோது, அது நமது நாட்டு மக்களை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பயணிகளை விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியது இந்தியா. இதுபோன்ற முன்னேற்பாடுகளை செய்வது அரசின் கடைமையாகும். இதை யாரும் குறைகாண முடியாது. ஆனால் இத்தகைய ஒரு முன்னேற்பாட்டை செய்வது ஒரு முஸ்லிம் நாடு என்றால் அங்கே வேறு பார்வை பார்க்கப்படுகிறது.
''ஜப்பானில் அணு உலைகள் வெடித்து, அவற்றில் இருந்து கதிர் வீச்சு பரவுவதால், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களை முழுமையாக சோதனையிடும்படி, சவுதி அரேபியா அரசு, தனது துறைமுக அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் அனைத்தையும், ஆய்வகத்தில் முழுமையாக சோதனையிடும்படியும், அந்த பொருட்களில் அணு கதிர் வீச்சின் பாதிப்பு உள்ளதா என கண்டறியும்படியும், தனது நாட்டில் உள்ள துறைமுக அதிகாரிகளுக்கு, சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, வர்த்தக சங்கத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோதனை செய்யப்படாத பொருட்களை, சவுதி அரேபியாவுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்ற செய்தியை வெளியிட்ட தினமலர் சந்தடி சாக்கில் தனது 'குசும்பை' வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த செய்திக்கு 'ஜப்பான் பொருட்களா? சவுதி அலறுகிறது' என்று தலைப்பிடுகிறது. இதன் மூலம் ஜப்பான் விசயத்தில் ஏதோ சவூதி பயந்து சாவது போன்ற தோற்றத்தை தர முயல்கிறது தினமலர். சவூதியின் முன்னெச்சரிக்கையில் என்ன தவறிருக்க முடியும்? சம்மந்தப்பட்ட ஜப்பானே தனது நாட்டு மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் பட்டுள்ளார்களா என பரிசோதிக்கும் போது, அந்நாட்டிலிருந்து வரும் பொருளை சவூதி சோதிப்பதை தினமலர் கிண்டலடிப்பது எதற்காக? ஒருவேளை வருமுன் காப்போம் என்பது தினமலருக்கு பிடிக்காதோ!
செவ்வாய், 29 மார்ச், 2011
ஜாதிக்கட்சியே ஆனாலும் கருணாநிதிக்காக கரம்பிடிப்பேன்''''''-ததஜ!
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ள தனிநபர் ஜமாஅத், திமுகவை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்ற தனது ஏக்கத்திற்கு ஏதுவாக இலவச இணைப்பாக சில கட்சிகளை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அதில் ஒன்றுதான் மருத்துவர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி. இக்கட்சி பற்றி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிநபர் ஜமாஅத் கொண்ட கொள்கை முழக்கத்தை நினைவு படுத்தி விட்டு பின்னர் விஷயத்திற்கு வருவோம்.
5-4-2009 கோவையில் TNTJ மாநிலப் பொதுக்குழு கூடியது இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் ஒன்று;
5. பமாக தொடர்ந்து முஸ்லிம் விரோதியாகச் செயல்படுவதாலும் இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து முஸ்லிம்களுக்கு தீவிரவாதிப் பட்டம் சுமத்தியதாலும் கடந்த தேர்தலிலும் இந்த தேர்தலிலும் முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கூட தராத காரணத்தினாலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் உள் வேளை செய்த காரணத்தினாலும் பமகாவை ஆதரிப்பதில்லை என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
தனிநபர் ஜமாஅத் மேற்கண்ட தீர்மானத்தில் பாமக பற்றிக் கூறியுள்ள விஷயத்தில் எந்த மாற்றமாவது ஏற்பட்டுள்ளதா? முஸ்லிம்களுக்கு தீவிரவாத பட்டம் சுமத்தியதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டதால் இந்த சட்டமன்றத் தேர்தலில் பாமகவை ஆதரிக்கிறார்களா? இந்த தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் பலரை பாமக நிறுத்தியதால் தனிநபர் ஜமாஅத் ஆதரிக்கிறதா? முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் செய்த உள்குத்து வேலையை பாமக விட்டு விலகிவிட்டதாக, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு புதுவையில் பாமக பாடுபடுவதாக தனிநபர் ஜமாத்திற்கு ஏதேனும் அறிவிப்பு வந்ததால் ஆதரிக்கிறார்களா?
மேலும், திமுக ஆதரவு கண்ட தனிநபர் ஜமாஅத்தின் பொதுக்குழுவில், முஸ்லிம்களுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காத பாமக பற்றி கேள்வி எழுப்பப் பட்டபோது அந்த தனிநபர், 'பாமக ஒரு ஜாதிக் கட்சிமா; அவன் ஒரு முஸ்லிம்களை நிறுத்தலன்னு சொல்றதே முட்டாள்தனம் என்று திருவாய் மலர்ந்தார்.
ஒரு முஸ்லிமை கூட நிறுத்தாத பாமகவை நாம் ஆதரிக்கனுமா என்று கேட்டால் அவ்வாறு கேட்பதே முட்டாள்தனம் என்று இன்று கூறும் இந்த தனிநபர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாமக முஸ்லிம்களை நிறுத்தாதது பற்றி தீர்மானத்தில் கொண்டுவந்தது முட்டாள்தனமில்லையா என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. ஏனென்றால் அண்ணன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
மேலும் பாமகவை ஜாதிக்கட்சி என்று இந்த தனிநபர் எந்த அடிப்படையில் கூறுகிறார்? ஒரு வாதத்தை வைக்கிறார். அதாவது ராமதாஸ், வன்னியர் ஒட்டு அன்னியருக்கு இல்லை என்று சொல்லி விட்டாராம். எனவே பாமக ஜாதிக்கட்சியாம். ராமதாஸ் சொன்னது அவரது இன உணர்வு. தனது சமுதாயத்தின் மீதான அக்கறை. தனது சமுதாய ஒட்டு வன்னியரைத் தவிர வேறு யாருக்கும் சென்று விடக்கூடாது. தனது சமுதாயத்தின் வாக்கு வங்கி தனது சமுதாயத்தின் வெற்றிக்கே பயன்படவேண்டும் என்ற அவரது சமுதாய நலன் சார்ந்த நோக்கம். அப்படி அவர் தனது சமுதாய வாக்குகளை ஒருங்கிணைத்து சில வெற்றிகளை ஈட்டியதால்தான் இன்றைக்கு திராவிடக் கட்சிகள் அவரோடு கூட்டணி வைக்க போட்டி போடுகின்றன. அவரது கட்சி சில மாவட்டங்களில் மட்டுமே வாக்கு வங்கி உடையதாக இருந்தாலும் தொகுதிகளை அள்ளிக் கொடுக்க திராவிடக் கட்சிகள் முன் வந்ததற்கு காரணம் அவரது சமுதாய ஓட்டுக்களை ஒருங்கினைத்ததே!
ஆனால் இந்த தனிநபரோ தானும் தனது ஜமாஅத்தும் மட்டுமே முஸ்லிம் சமுதாய பாதுகாவலர்கள்; சமுதாய நலன் விரும்பிகள் என்று சொல்லிக்கொண்டு, சமுதாயத்தின் வாக்குகளை பிரித்ததோடு, தனது வரட்டு கவுரவத்திற்காக முஸ்லிம் சமுதாய வேட்பாளரை தோற்கடித்து, சமுதாயத்தின் வாக்குகளை அடுத்தவர் அறுவடை செய்ய திட்டங்கள் தீட்டுகிறார். தீர்மானங்கள் போடுகிறார். இவர் ராமதாஸிடம் பட்டும் படிக்கட்டும்.
ஆனாலும் நம்புங்கள் முஸ்லிம்களே! இவர்கள் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாவலர்கள்[!?]
குறிப்பு; பாமக குறித்து நாங்கள் வைத்த குற்றச்சாட்டு இன்னும் அப்படியேதான் உள்ளது. பாமக எந்த வகையிலும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனாலும் பாமகவை ஆதரிப்போம். ஆனால் மமக குறித்த விசயத்தில் மாத்திரம் மண்ணைக்கவ்வ வைக்கும் எங்களின் முடிவில் எந்த மாற்றமுமில்லை. ஏனெனில் இவர்கள் முஸ்லிம்கள் என்பதால்.
திங்கள், 28 மார்ச், 2011
துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
முன்னுரை; நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியை ஆதரிக்க உள்ளதாம் தனிநபர் ஜமாஅத். அந்த திமுக அணியில் இடம்பெறுள்ள காங்கிரஸ் குறித்த தனிநபர் ஜமாஅத்தின் கடந்த சில மாத எழுத்துக்களை- தீர்மானங்களை மக்கள் பார்வைக்கு வைக்கிறோம். ஆனாலும் இவர்கள் மட்டுமே சமுதாயத்தின் காவலர்கள் என்று நம்ப வேண்டும் இல்லையேல் நீங்கள் தடம்புரண்டவர்களாகி விடுவீர்கள்;
17.10.2010 அன்று செங்கல் பட்டில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகங்கள்.
துரோகம் : 1
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23 நள்ளிரவில்தான் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோரின் சிலைகள் பாபரி மஸ்ஜிதின் உள்வளாகத்தில் வைக்கப்பட்டன. அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தச் சிலைகளை உடனே அப்புறப்படுத்தி , அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததோடு மட்டுமல்லாமல் ஐவேளை தொழவிடாமல் தடுத்து நிறுத்தி பள்ளிவாசலை இழுத்து மூடிய துரோகத்தை காங்கிரஸ்தான் செய்தது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் இந்த அக்கிரமத்திற்கு துணைபோனது.
துரோகம் : 2
1989 ராஜீவ் காந்தி பிரதம அமைச்சராக இருக்கும் போது நாடாளுமன்ற தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்துக்கள் ஓட்டுக்களை பொறுக்குவதற்காக பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்த நிலத்திற்குள் விஸ்வஹிந்து பரிஷத் குண்டர்கள் சிலா நியாஸ் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு வைபவத்தை நடத்துவதற்கு அனுமதிவழங்கியததான் 1992ல் பாபர் மஸ்ஜித் உடைப்பிற்கு காரணமானது. இது காங்கிரஸ் கட்சி செய்த அடுத்த துரோகமாகும்
துரோகம் : 3
1992 பாபரி பள்ளிவாசல் இடிக்கப்படப் போகின்றது என்று உளவுத் துறை தகவல் தெரிவித்தும் மாநில பிஜேபி அரசைக் கலைக்காமல் கரசேவை என்ற பெயரில் இராணுவத்தின் மேற்பார்வையில் இந்துத்துவா சக்தி கயவர்கள் பாபரி மஸ்ஜிதை இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததும் காங்கிரஸ் ஆட்சிதான்.
துரோகம் : 4
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பிறகு அதே இடத்தில் தற்காலிக கோயில் கட்ட அனுமதித்ததும் காங்கிரஸ் அரசுதான்.
துரோகம் : 5
பாபர் மஸ்ஜித் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்னால் வெறும் சிந்தனையோட்டமாக மட்டுமே இருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் முதன் முதலாக பள்ளியின் கீழ் கோயில் இருந்ததா? என்பதை ஆய்வு செய்வதற்காக தன் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சிக்குரிய வழிகளை ஏற்பாடு செய்தது.. அதுதான் இன்றைய இந்தத் தீர்ப்பிற்கு காரணமாக அமைந்தது. இப்படி அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு துரோகங்களுக்காக காங்கிரஸ் கட்சியை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
தீவுத்திடலில் 15 லட்சம் பேர்[?] கூடிய மாநாட்டில் தீர்மானம்;
இந்திய நாட்டை உருவாக்குவதிலும், இந்தியாவின் அடிமைத் தளையை உடைத்தெறிவதிலும் பெரும் பங்கு ஆற்றிய முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளன. முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் தெளிவான பரிந்துரை யையும் வழங்கியுள்ளது.
கல்வியில் இட ஒதுக்கீடு
முஸ்லிம்களின் இந்த அவல நிலை மாறிட ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து மாநிலங்களில் உள்ள கல்லூரிகளிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க வேண்டும் என்று முஸ்ம் சமுதாயம் சார்பில் இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.
வேலை வய்ப்பில் இட ஒதுக்கீடு
அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மத்திய அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார்கள் நடத்தும் பெரிய நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.
பாதுகாப்புத்துறையில் இட ஒதுக்கீடு
நாட்டில் நடக்கும் வகுப்புக் கலவரங்களின்போது, காவல்துறை, உளவுத்துறை, மத்தியக் காவல் படை, துணை இராணுவம் மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து துறைகளும் பாரபட்சமாகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நடந்துள்ளனர். இதை மத்திய அரசு அமைத்த பல்வேறு கமிஷன்கள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளன. எனவே மத்திய அரசின் இராணுவம், உளவு உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளிலும் மாநில அரசுகளின் காவல் மற்றும் உளவுத்துறையிலும் 20 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.
அரசியல் அதிகாரத்தில் தனி இட ஒதுக்கீடு
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் முஸ்ம்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும், பெரும்பான்மை சமுதாய வேட்பாளரையே நிறுத்துவதால் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற இயலவில்லை. இந்த நிலை மாறிட தத் சமுதாய மக்களுக்கு ரிசர்வ் தொகுதிகள் இருப்பதுபோல் உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளு மன்றம், மாநிலங்களவை, மாநில மேலவைகள் அனைத்திலும் பத்து விழுக்காடு தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவித்து சட்டமியற்ற மத்திய அரசை முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இம்மாநாடு வயுறுத்துகிறது.
நலத்திட்டங்களிலும் இட ஒதுக்கீடு
மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்டங்களிலும், இலவசத் திட்டங்களிலும் அதிகாரிகள் முஸ்லிம்களைப் புறக்கணித்து துரோகம் செய்து வருகின்றனர். எனவே நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப அனைத்து நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
காங்கிரஸின் தார்மீகக் கடமை
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தன் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியது. அதை நம்பி முஸ்லிம்கள் வாக்களித்ததால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மிஸ்ரா அறிக்கைக்காக மட்டுமன்றி காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிக்காகவும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் தார்மீகப் பொறுப்பு கங்கிரசுக்கு உள்ளது என்பதையும் காங்கிரசுக்கு இம்மாநாடு சொல்லிக் கொள்கிறது.[2004தேர்தல்அறிக்கையில் சொன்னதை 2011வரை நிறைவேற்றாமல் அல்வா கொடுக்கும் காங்கிரஸை மீண்டும் ஆதரிப்பது ஒருபுறம்; அதேபோன்று தேர்தல் அறிக்கையில் பரிசீலிப்போம் என்று மட்டும் சொல்லியுள்ள திமுகவை ஆதரிக்கிறது தனிநபர் ஜமாஅத். காங்கிரஸ் தந்த அல்வாவை தின்றபின்னும் தேர்தல் அறிக்கைஇல் சொல்லிவிட்டால் அது நம்பகமானது என தனது ரசிகர்களை நம்ப வைக்கலாம். முஸ்லிம்களை நம்ப வைக்கலாமோ?]
பிரதமர்-சோனியா சந்திப்பு முடிந்தவுடன் செய்த ஃபில்டப்;
பிரதமர், நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.
சோனியாகாந்தி, இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.
கடந்த 06-07-2010 ல் நடந்த சந்திப்பின் போது, முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது என்று முடிவாகி விட்டது. எத்தனை சதவிகிதம் என்பதில்தான் விவாதம் நடக்கிறது என்று சோனியா சொன்னதாக சொன்ன இந்த தனிநபர்ஜமாத்தினர், அந்த விவாதத்தை இன்னும் தொடரும் சோனியாவின் காங்கிரஸை தமிழகத்தில் ஆதரிக்கிறார்களாம்.
ஆக பாபர் மஸ்ஜித் விசயத்தில் துரோகம் செய்த காங்கிரஸ் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு, இட ஒதுக்கீடு விசயத்தில் இன்றுவரை ஏமாற்றும் காங்கிரஸை தமிழகத்தில் ஆதரிக்க கிளம்பி விட்டது இந்த சமுதாய நலனை மட்டுமே முன்னிறுத்தும்[!?] தனிநபர் ஜமாஅத்.
ஒருவேளை மத்தியில் ஆளும் காங்கிரஸ் வேறு; தமிழ்நாட்டில் இப்போது போட்டியிடும் காங்கிரஸ் வேறோ என்னவோ? அல்லது காங்கிரஸை நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்வோம் என்று வாய்ச்சவடால் அடிக்கப் போகிறார்களா? அதுவும் செய்யமுடியாது. ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்க மாட்டோம் என்று பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுவிட்டு, பிறகு கொல்லைப் புறமாக மாவட்ட முடிவு- மண்ணாங்கட்டி முடிவு என தீவிரமாக காங்கிரஸை ஆதரித்ததையும் முஸ்லிம்கள் மறக்கவில்லை.
ஆயிரம் துரோகங்களை முஸ்லிம்களுக்கு செய்தாலும் அன்னை சோனியாவை ஆதரிப்போம். ஆனால் மறந்தும் கூட முஸ்லிமான மமகவை மன்னிக்கவே மாட்டோம்.
நம்புங்கள் முஸ்லிம்களே! இவர்கள் மட்டுமே சமுதாய காவலர்கள்[?!].
ஞாயிறு, 27 மார்ச், 2011
கைமேல் தரும் அன்பளிப்புக்கு தடை; வருங்கால கவனிப்புக்கு அனுமதியா?
மற்றொருவர் 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்.ஆதரவற்ற ஆண்கள், பெண்கள், முதியவர்களுக்கு தங்கும் இடம், உணவு இலவசம் என்கிறார்.
அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச, "லேப்-டாப்!'என்கிறார்.
சனி, 26 மார்ச், 2011
தனிநபர் ஜமாஅத்தின் ஆதரவு; திமுக அவசர சட்டம் பிறப்பித்து விட்டதா?
- மத்தியில் இட ஒதுக்கீடு விசயத்தில் தொடர்ந்து துரோகமிழைக்கும் காங்கிரஸ் விசயத்தில் இவர்களின் நிலை என்ன?
- ஜெயலலிதா இரு முஸ்லிம்களை மட்டுமே நிறுத்தியுள்ளார் என முறுக்கிக்கொண்ட இவர்கள், ஒரு முஸ்லிமை கூட நிறுத்தாத பாமக விஷயத்தில் நிலை என்ன?
- சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகள் விசயத்தில் இவர்களின் நிலை என்ன?
- மமக மற்றும் முஸ்லிம் லீக் கட்சியை ததஜ கணக்கிலேயே எடுப்பது கிடையாது என்று எழுதிய இவர்கள், முஸ்லிம்லீக் விசயத்தில் எடுக்கும் நிலை என்ன?
- முஸ்லிம் லீக்கை கணக்கிலெடுக்க இப்போது இவர்கள் முன் வந்தால் அதே நிலையில் உள்ள மமகவை மட்டும் புறக்கணிப்பது ஏன்?
தேர்தல் நிலைப்பாடு; தாங்கள் பொய்யர்களே என நிரூபித்த தனிநபர் ஜமாஅத்!
வெள்ளி, 25 மார்ச், 2011
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும்: ஜெ., அறிவிப்பு
தன்மானக் குரல் எழுப்பிய சகோதரி ஃபாத்திமா முஸஃப்ஃபர் நீக்கம்!
பிள்ளையார் சுழியுடன் பிரச்சாரமா? மைதீன்கானே இதுதான் இஸ்லாமிய நெறியா?
வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தனது பிரச்சாரத்தை தொடங்கிய இடம்தான் கவனிக்க வேண்டியதாகும். இவர் நெல்லை வண்ணார்பேட்டை சாலைத் தெருவில் உள்ள வெற்றி வேலடி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினாராம்.
என்ன இப்படி? என கட்சிக்காரர்களிடம் கேட்டால், மைதீன்கான் இதே தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் போட்டி போட்டபோதும் இதே கோயிலில் வணங்கிவிட்டுதான் பிரசாரத்தை தொடங்கினார். இரு தேர்தல்களிலும் அவருக்கு அமோக வெற்றி. அதுமட்டுமல்ல, கடந்த தேர்தல் வெற்றி அவரை அமைச்சராகவும் ஆக்கியது. அந்த "சென்டிமெண்ட்'தான் மைதீன்கானை இந்தத் தேர்தலிலும் இங்கே அழைத்து வந்துள்ளது என்றனராம்.
பாகிஸ்தானில் இரட்டைக் கொலையும்; அமெரிக்காவின் இழப்பீடும்!
இஸ்லாமிய சட்டப்படி கொலைகாரர், கொலையானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு (ரத்தப்பணம்) கொடுக்க வேண்டும். இந்த இழப்பீட்டை பெற்றுக்கொண்டு கொலைகாரரை மன்னிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தால், கொலைகாரரை விடுதலை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவின் உதவியைப் பெற்று வரும் பாகிஸ்தான், தனது மக்கள் விஷயத்தில் அமெரிக்காவின் ஆதிக்கக் குரலுக்கு செவி சாய்க்கவில்லை.
பாலஸ்தீனத்தில் மக்கள் போராட்டம்; இது ஆட்சியை மாற்றக் கோரி அல்ல.
பொருத்து பார்த்து பொங்கி எழுந்த பஹ்ரைன்; அடங்கிய கிளர்ச்சியாளர்கள்!
பாபர் மசூதி இடிப்பு; நீலிக்கண்ணீர் வடிக்கும் அத்வானி!
நான் அப்படி கூறி இருந்ததற்கு கட்சியில் என்னுடன் பணிபுரியும் சிலர், நீங்கள் அப்படி ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று விமர்சித்து இருந்தனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று, ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அப்போதைய உத்தரபிரதேச மாநில அரசு, மிகவும் கவனத்துடன் செயல் திட்டம் ஒன்றை தயாரித்து அதை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தது.
எந்த ஒரு சட்ட விதிகளையோ அல்லது கோர்ட்டு உத்தரவுகளையோ மீறாத வகையில், கோவில் கட்டுவதற்காக போடப்பட்டு இருந்த செயல் திட்டத்தை அந்த துயர நிகழ்வால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. இவ்வாறு கூறியுள்ளார் அத்வானி.
புதன், 23 மார்ச், 2011
ஒரு தேர்தல்; கண்ணித்தீவாக நீளும் தனிநபர் ஜமாஅத் ஆதரவு நிலைப்பாடு!
''தேர்தல் குறித்து முடிவு செய்ய ஏற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் வருகின்ற 26-3-11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை இம்பீரியல் ஹால் – எழும்பூர்- இல் மாநில அவசரப் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இதையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
என்று அழைப்பு விடுக்கிறது தனிநபர் ஜமாஅத்.
06..3.11 செயற்குழுவில் முடிவுகள் எடுத்ததாக கூறியது பொய்தானே!
அது உண்மை எனில் அந்த செயற்குழுவில் எடுத்த முடிவை மாநில நிர்வாகம் அறிவிக்க வேண்டியது தானே!
செயற்குழு முடிவை அறிவிக்காமல் இன்னொரு அவசர பொதுக்குழு எதற்கு?
இந்த பொதுக்குழுவில் 'முடிவெடுக்கப் போவதாக' கூறுவதன் மூலம் ஏற்கனவே செயற்குழுவில் முடிவெடுத்தோம் என்று சொன்னதை பொய் என இந்த பொய்யர் பீஜே ஜமாஅத் ஒத்துக் கொள்கிறதா?
நாங்கள் அந்த செயற்குழுவில் முடிவெடுக்கவில்லை; முடிவை பொதுக்குழு தீர்மானிக்கும் என்று தான் முடித்தோம் என்றால் அதை அறிவிக்காதது ஏன்?
சப்பைக் கட்டு கட்டாமல் பதிலளிப்பார்களா தனிநபர்வாதிகள்?
ஞாயிறு, 20 மார்ச், 2011
பறந்தது பட்டம் மட்டுமல்ல; பச்சிளம் பாலகனின்உயிரும்தான்!
செரீன் பானுவை தனது பைக்கில் முன் பகுதியில் அமர்த்தி பீச்சுக்கு அழைத்துச்சென்ற வேளையில் யாரோ விட்ட காற்றாடியின் மாஞ்சா நூல் குழந்தை செரீன் பானுவின் கழுத்தை அறுத்தது. இதனால் ரத்தம் பீறிட்டு வடிந்தது.
உடனடியாக பெற்றோர் அழுது கொண்டு அந்த குழந்தையை அருகில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை செரீன் பானுவுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
வெள்ளி, 18 மார்ச், 2011
அமெரிக்காவில் போலி சாமியாருக்கு தண்டனை!
லிபியாவுக்கு நிவாரணப் பொருட்கள்; குவைத் அனுப்பியது!
லிபியாவில் ஒரு மாத களமாக நீடித்துவரும் ஆட்சியாளருக்கு எதிரான கிளர்ச்சி ஒரு உள்நாட்டு போராகவே உருவெடுத்துள்ளது. இந்த கிளர்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் மாண்டுள்ளனர். ஆயிரக்கணக்கனோர் காயமுற்றுள்ளனர். இந்நிலையில், லிபியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக, குவைத் அதிபர் ஷேக் சபா அல் அஹ்மத் சபா அவர்களின் உத்தரவின் பேரில், 14 டன் எடையுள்ள மருந்துப் பொருட்கள் உள்ளடக்கிய நிவாரணப் பொருட்கள் குவைத் சார்பாக அனுப்பப் பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், துனிசியா-லிபியா எல்லைப் பகுதி நிவாரணப் பணிகளுக்காக ஒரு மில்லியன் டாலர் ஐ.நாவின்[UNHCR ] வசம் குவைத் வழங்கியுள்ளதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
சுனாமி; இயற்கையின் சீற்றமா? இறைவனின் நாட்டமா?
அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.
மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது; "(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்ர்கள் (11:36) |
"நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்." (11:37) |
அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்; "நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்" என்று கூறினார். (11:38) |
"அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்" (என்றும் கூறினார்). (11:39) |
இறுதியாக, நம் உத்தரவு வந்து, தண்ணீர் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) "உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை. (11:40) |
இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார். (11:41) |
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி ந்ன்ற தம் மகனை நோக்கி "என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!" என்று நூஹ் அழைத்தார். (11:42) |
அதற்கு அவன்; "என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின்மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்" எனக் கூறினான். இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டiளியிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகவி விட்டான். (11:43) |
பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. (11:44) |
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.[8 ;25 ]
அல்லாஹ் பொதுவாக ஒரு அழிவை உண்டாக்கும்போது அதில் நல்லவர்கள் பாதிக்கப்பட்டாலும், அவர்களின் எண்ணத்திற்கேற்ப நன்மையுண்டு என்று நபியவர்கள் விளக்கமளித்துள்ளர்கள். இது ஒருபுறமிருக்க, இதைப் போன்ற பேரழிவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் என்பதை நபி[ஸல்] முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
பொதுச் சொத்து தன் சொத்தைப் போல பாவிக்கப்படும் போது,
போரில் கிடைக்கப்படும் அமானிதம் (கனீமத்) தன் பங்குப் பொளாகக் கருதப்படும் போது,
ஜகாத் கடன் கொடுப்பதைப் போன்று கடினமாகக் கருதப்படும் போது,
தீனுடைய நோக்கமின்றி கல்வி கற்பிக்கப்படும் போது,
கணவன் தன் மனைவிக்கு அடிபணிந்து வாழும் போது,
பெற்ற தாய் தன் மக்களால் வேதனை செய்யப்படும் போது,
தனது நண்பனை தனக்கு நெருக்கமாக்கி, பெற்றெடுத்த தந்தையை புறக்கணிக்கும் போது,
அல்லாஹ்வின் பள்ளிவாயில்களில் சப்தங்கள் உயர்த்தப்படும் போது,
ஒரு கூட்டத்தினருக்கு அவர்களில் உள்ள தீயவன் தலைவனாகும் போது,
ஒரு கூட்டத்திலுள்ள இழிவானவன் கண்ணியமானவனாகவும், கண்ணியமானவர் அவர்களில் மிக இழிவானவராகக் கருதப்படும்போது,
ஒரு மனிதனுடைய தீமைக்குப் பயந்து அவனுக்கு கண்ணியமளிக்கப்படும் போது
ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்களும், இசைக்கருவிகளும் அதிகரிக்கும் போது,
மதுபானங்கள் தாராளமாக அருந்தப்படும் போது,
இந்த உம்மத்தில் பின்னால் வருகிறவர் முன் சென்றவர்களைச் சபிக்கும் போது
இத்தகைய காரியங்களெல்லாம் ஏற்படுகிற காலத்தில் சிவந்த நிறமான காற்றையும், நில நடுக்கத்தையும், பூமிக்குள் அழுத்தப்படுவதையும், உருவமாற்றம் நிகழ்வதையும், கல்மாரி பொழிவதையும் நூலருந்த மணிகள்போல் ஒன்றன்பின் ஒன்றாக பல வேதனைகளை எதிர்பாருங்கள். அறிவிப்பவர் : அபூஹூரை (ரழி) நூல் : திர்மிதி.
இறைத்தூதர்[ஸல்] அவர்கள் தன் திருவாயால் முன்னறிவிப்பு செய்த மேற்கண்ட அநியாயங்கள் இன்றைக்கு உலகில் அச்சரம் பிசகாமல் நடக்கிறதா? இல்லையா? பொதுச் சொத்துக்களை தனதாக்கிக் கொள்வதும், உலக ஆதாயத்திற்காக மார்க்கத்தை கற்பதும், தீயவன் சமுதாய தலைவனாக காட்சியளிப்பதும், அந்த தீயவனுக்கு பயந்து அவனுக்கு மரியாதை செலுத்தி, அவன் சொல்லும் அனைத்திற்கும் தலையாட்டுவதும், அமைதியாக இருந்த பள்ளிவாசல்கள் துப்பாக்கி சத்தம் கேட்கும் இடமாக மாற்றப்பட்டதும், நல்லவனை இழிவாகவும், அயோக்கியனை தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், மேலும், மது-விபச்சாரம்- ஆடல்- பாடல்- இப்படி எல்லாம் மிகுதியாகி விட்டதை கண்கூடாக காண்கிறோம். இத்தகைய இழிநிலையை மாற்றி இறைவனின் அச்சத்தை மனிதில் தாங்கி, இறையச்சமுடையவர்களாக நாம் மாறவேண்டும் என்பதுதான் இந்த சுனாமி தரும் படிப்பினையாகும்.