செவ்வாய், 31 ஜூலை, 2012
குஜராத் கலவர வழக்கு: 21 பேருக்கு ஆயுள் தண்டனை.
திங்கள், 30 ஜூலை, 2012
ரமளான் இரவுத் தொழுகை.
ஸஹர் நேரம் தவறிவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அவர்கள் தொழுகை நடத்தியுள்ளார்கள், இஷா முதல் ஸஹர் வரை நபியவர்கள் ஒரேயொரு தொழுகையை தொழுதிருக்கிறார்கள் என்றால் அது தஹஜ்ஜுத் தொழுகைதான் என்பதற்கு வேறெந்தச் சான்றும் தேவையில்லை. ஏனெனில் நம்மைப் பொருத்தவரை சுன்னத்தான தஹஜ்ஜுத் தொழுகை என்பது நபிகள் நாயகம் அவர்கள் தவறாமல் (ரமளான் அல்லாத காலங்களிலும்) நிறைவேற்றி வந்த ஒரு தொழுகையாகும். இந்தத் தொழுகையை விடுத்து நபி(ஸல்) அவர்கள் மற்றொரு சிறப்பான தொழுகையை தொழுது கொண்டிருந்தார்கள் என எவரும் கூற முன் வரமாட்டார்கள். இதிலிருந்து ரமளானுக்கென்று தனியாக ஒரு தொழுகையை அவர்கள் தொழவில்லை என்பதை இது தெளிவாக விளக்குகிறது.
உமர்(ரலி) அவர்களின் இந்தக் கூற்றும் ரமளானுக்கு என்று விஷேசத் தொழுகை எதுவும் கிடையாது என்பதை அறிவிக்கிறது. "இப்போது தொழுதுவிட்டு உறங்குவதைவிட, உறங்கிவிட்டு இரவின் இறுதியில் தொழுவது சிறந்தது" என்ற அவர்களின் கூற்றிலிருந்து இத்தொழுகை இரவின் இறுதிப்பகுதியில் நபிகள் நாயகம் தொழுது வந்த தஹஜ்ஜுத் தொழுகை என்பதனையும் விளங்கலாம். "இரவின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே தொழுகைதான். ஆரம்ப நேரம் ஒரு தொழுகை, இறுதி நேரம் ஒரு தொழுகை" என்று இரண்டு தொழுகைகள் கிடையாது என்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அன்றாடம் இரவு தொழுதுவரும் தஹஜ்ஜுத் தொழுகைதான் ரமளானிலும் உள்ளது. ரமளானுக்கென்று தனித் தொழுகை எதுவும் கிடையாது என்பது இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.
மேற்கண்ட ஹதீஸில் உமர்(ரலி) அவர்கள் உபைத் பின் கஃப் (ரலி) அவர்களை இமாமாக நியமித்ததாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக மற்றொரு ஹதீஸில்,
உபைத் பின் கஃப் (ரலி) அவர்களையும் தமீமுத் தாரி (ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக் அத்துகள் தொழ வைக்குமாறு உமர்(ரலி) அவர்கள் கட்டளை இட்டார்கள். (ஆதாரம்: முஅத்தா).
உமர் (ரலி) அவர்கள் 11 ரக் அத்கள் தொழ வைக்குமாறு இமாமை நியமனம் செய்தது 20 ரக்அத் கொண்ட தராவீஹ் என்ற தனித்தொழுகை கிடையாது என்பதைத் தெளிவாக்குகிறது.
அப்படி என்றால் ரமளானுக்குரிய சிறப்பு என்ன என்ற கேள்வி எழலாம். எல்லா நாட்களிலும் இந்தத் தொழுகையைத் தொழவேண்டும் என்றாலும் ரமளானில் இந்தத் தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. "யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்நோக்கியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன" என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.
இது போன்ற ஹதீஸ்கள் யாவும் ரமளானில் நின்று வணங்குவதில் ஆர்வமூட்டுகின்றன. நபி (ஸல்) அவர்கள் பதினோரு ரக் அத்துகளைக் கொண்டு சில வேளைகளில் இரவு முழுவதும் நின்று வணங்கியுள்ளதால் அவ்வாறு வணங்குவதையே அது குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் 11 ரக் அத்துகளே நின்று வணங்கியுள்ளதால் அதையே நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்
ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிற இயக்க தலைவர்களை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்து அதன் மூலமாக சமூகத்திற்கு பயன் தரக்கூடிய செயல்களை ஒன்றினைந்து செயல்படுத்துவதற்காக ஒரு தலைப்பின் கீழ் விவாதம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இவ்வருடமும் நேற்றைய தினம் அண்ணா சாலையிலுள்ள வெல்லிங்டன் பிளாசாவில் வைத்து நடைபெற்றது.
இ ந் நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி தொகுத்து வழங்கினார். பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அறிமுக உரை நிகழ்த்தி விவாதத்திற்கான தலைப்பினை முன்வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூதாய தலைவர்கள் பின்வருமாறு:
1. சகோ. முனீர் (இந்திய தவ்ஹீத் ஜமாத்)
2. முஹம்மது ஹனீஃபா (இஸ்லாமிய தொண்டு இயக்கம்)
3. பேராசியர். எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் (இஸ்லாமிய இலக்கிய கழகம்)
4. சகோ. ஆளூர் ஷானவாஸ்
5. சகோ. ஹாமித் பக்ர் மன்பஈ (இஸ்லாமிய ஐக்கிய பேரவை)
6. சகோ. மேலை நாசர் (சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை)
7. சகோ. தர்வேஷ் ரஷாதி (தலைமை இமாம், வடபழனி)
8. சகோ. காயல் மஹபூப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
9. சகோ. உமர் ஃபாரூக் (மறுமலர்ச்சி தேசிய லீக்)
10. சகோ. நிஜாமுதீன் (முன்னால் சட்டமன்ற உறுப்பினர்)
11. சகோ. யூசுஃப் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
12. தெஹ்லான் பாகவி (எஸ்.டி.பி.ஐ)
அந்த மூன்று விஷயங்கள்[15] மண்ணறை வாழ்விலும் தொடரும் நன்மைகள்!:
மண்ணறை வாழ்விலும் தொடரும் நன்மைகள்!:
ஒரு மனிதன் மரணித்துவிடும் போது அவனது அனைத்து செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. மூன்று காரியங்களைத் தவிர அவைகள்:
- அவன் செய்த நிலையான தர்மம்,
- அவனது கல்வியின் மூலம் பிறர் பயனடைந்தது,
- அவனது ஸாலிஹான குழந்தை அவனுக்காக கேட்கும் பிரார்த்தனை.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம்).
***************************************************
-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....
ஞாயிறு, 29 ஜூலை, 2012
பெட்ரோலுக்கு பதில் தண்ணீரில் ஓடும் கார்: பாகிஸ்தான் பொறியாளர் சாதனை

சனி, 28 ஜூலை, 2012
அந்த மூன்று விஷயங்கள்[14] உண்மையில் உமது பொருள் எது?
அடியான் எனது பொருள், எனது பொருள் என கூறுகின்றான். உண்மையில் அவனது பொருள்:
- அவன் உண்டு கழித்தவைகளும்,
- அவன் உடுத்தி கிழித்தவைகளும்,
- அவன் முன் கூட்டி (அல்லாஹ்விற்காக) செய்த தர்மங்களும்.
அதைத் தவிர அவன் பாதுகாக்கும் மற்றவைகள் அனைத்தும் ஏனையவர்களுக்கு விட்டுச் செல்பவைகளே" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).
***************************************************
-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....
புனித ரமலானும்- புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும்!
அல்லாஹ்வின் அருள் நிறைந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை வந்தடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். இந்த ரமலானில் நோன்பு நோற்கவேண்டும் என்று அறிந்துவைத்துள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த நோன்பின் தாத்பரியத்தையும்- சட்டங்களையும் அறியாதவர்களாகவும், இன்னும் சிலர் பேணுதல் என்ற பெயரில் இந்த நோன்பை சிரமமானதாக மாற்றிக்கொள்வதையும் பார்க்கிறோம். எனவே, அப்படிப்பட்டவர்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காக இந்த ஆக்கம் வரையப்பட்டுள்ளது .
நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்?நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது என்று நம்மவர்களில் சிலரிடம் கேட்டால், ஏழைகளின் பசியை வசதி படைத்தவர்கள் உணரவேண்டும் என்பதற்காகத்தான் கடமையாக்கப்பட்டது என்பார்கள். ஒரு பாடகர் கூட, 'மண் வீட்டின் பசியை மாளிகைகள் உணர்ந்து மனிதாபிமானம் கொள்ள போதிப்பது நோன்பு' என்று பாடுவார். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனெனில், ஏழைகளின் பசியை வசதிபடைத்தவர்கள் உணர்வதுதான் நோன்பின் நோக்கம் என்றால், பணக்காரர்களுக்கு மட்டும் கடமையாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வல்ல இறைவன் கூறுகின்றான்;
شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்[அல்-குர்ஆன்2:185 ]
இந்த வசனத்தில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதில் ஏழைகள்-பணக்காரர்கள் என்ற வேறுபாடு கிடையாது அனைவர் மீதும் கடமை. சரி! வேறு என்னதான் காரணம்?
அல்லாஹ் கூறுகின்றான்;
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.[அல்-குர்ஆன் 2:183 ]
இந்த வசனத்தில் நோன்பு கடமையாக்கப்பதின் நோக்கம் நாம் இறையச்சமுடையவர்களாக ஆகவேண்டும் என்பதுதான் என்பது தெளிவாக புரிகிறது. சரி! மற்ற அமல்களில் வராத இறையச்சம் இந்த நோன்பில் மட்டும் வந்துவிடுமா என்றால் உண்மையான நோன்பாளியாக இருந்தால் கண்டிப்பாக வரும்.
எப்படியெனில், ஒருவன் தொழுகையாளியா-ஜக்காத் கொடுப்பவனா-ஹஜ் செய்தவனா என்று நாம் வெளிப்படையாக அறியமுடியும். ஆனால் நோன்பை பொறுத்தவரையில், ஒருவன் நோன்பு நோற்காமலேயே நான் நோன்பாளி என்று கூறினால் நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. எனவே இறைவனுக்கு அஞ்சுபவன் மட்டுமே நோன்பு பிடிப்பான். மேலும் நோன்பு நோற்ற ஒருவன் அவனது வீட்டில் அவனது உழைப்பால் உருவான உணவு இருக்கும். அவன் நினைத்தால் கதவை சாத்திவிட்டு ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாயை துடைத்துக்கொண்டு வெளியே வந்தால் யாரும் கண்டுகொள்ள முடியாது. ஆனாலும் ஒரூ நோன்பாளி அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், நமது உணவாக இருந்தாலும், நாம் சாப்பிடுவதை பருகுவதை மனிதர்கள் யாரும் பார்க்காவிட்ட்டாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனவே நாம் சாப்பிடக்கூடாது என்று அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்கிரானே அதுதான் இறையச்சம்! தனது சொந்த உழைப்பில் உருவான உணவையே இறைவனுக்கு பயந்து தவிர்ந்துகொண்டவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் நேர்மையாக இருப்பான். இவ்வாறு மாற்றியது நோன்பின் மூலம் பெறும் இறையச்சம்தானே!
அடுத்து, நோன்புடைய காலங்களில் பகலில் இல்லற வாழ்க்கை கூடாது. கணவன்-மனைவி மட்டும் இருக்கிறார்கள். அவ்விருவரும் நோன்பு நோற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவ்விருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களை யாரும் கண்டுகொள்ளமுடியாது. ஆனாலும் அவர்கள் இறைவன் தடுத்திருக்கிறான் என்ற பயத்தின் காரணமாக தவிர்ந்து கொள்கிறார்களே தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்கிறார்களே இதுதான் இறையச்சம்! இப்படி தனக்கு சொந்தமான மனைவியை இறைவன் சொல்லிவிட்டான் என்பதற்காக தவிர்ந்துகொன்டவன், அந்நிய பெண்ணை ஏறெடுத்தும் பார்ப்பானா? எந்த இறைவனுக்கு பயந்து நோன்புடைய பகல் நேரத்தில் நம்முடைய சொந்த மனைவியை தவிர்ந்து கொண்டோமோ, அதே இறைவன்தான் கூறுகின்றான்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்; அன்னிய பெண்ணை பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்று. எனவே நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்று தன்னை தடுத்துக்கொள்வான். இந்த இறையச்சத்தை வழங்கியது நோன்பு அல்லவா? எனவே உள்ளச்சத்துடன் நோன்பு நோற்றால் இறையச்சம் நிச்சயம் வரும்.
இந்த மாதத்தின் சிறப்புகளில் சில;
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [புஹாரி 1901]
"ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.[புஹாரி எண் 1898 ]
"ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்." [புஹாரி எண் 1899 ]
நோன்பாளியின் சிறப்புகள்; கிடைக்கும் பரிசுகள்;
நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்![புஹாரிஎண் 1894 ]
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!" [புஹாரி எண் 1896 ]
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!" என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக மகிழ்ச்சியடைகிறான்." [புஹாரி எண் 1904 ]
நோன்பாளி செய்யவேண்டியவை;
தான தர்மங்களை வாரிவழங்குதல்;
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் - ரமலான் முடியும்வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்[புஹாரி எண் 1902 ]
ஸஹர் உணவை உட்கொள்ளுதல்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!" [புஹாரி எண் 1923 ]
பெரும்பாலானோர் இரவின் முற்பகுதியிலேயே சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார். ஸஹர் நேரத்தில் எழும்புவதில்லை. சாப்பிடுவதுமில்லை. இவர்களில் சிலர் 'பஜ்ர்தொழாமல் தூங்குபவர்களும் உண்டு. எனவே இதுபோன்ற செயல்களை விட்டு, ஸஹர் நேரத்தில் சாப்பிடும் நபிவழியை அமுல்படுத்தவேண்டும்.
நோன்பு திறப்பதை விரைவு படுத்துதல்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!" [புஹாரி எண் 1957 ]
நோன்பு நிறைப்பதை பொருத்தமட்டில் தவ்ஹீத்வாதிகள் நீங்கலாக, மற்றவர்கள் சூரியன் மறையும்நேரத்தையும் தாண்டி பேணுதல் என்ற பெயரில் பத்துநிமிடம் தள்ளிவைத்து பின்பு nabi [ஸல்] அவர்களால் காட்டித்தரப்படாத நிய்யத்தை சொல்ல ஐந்துநிமிடம் இவ்வாறாக தாமதப்படுத்தி நோன்பு திறப்பதை பார்க்கிறோம். இது தவறாகும். எனவே சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பதுதான் சிறந்ததாகும்.
பிரார்த்தனைகளை அதிகமாக செய்தல்.
நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்பது நபிமொழியாகும்.
நோன்பாளி செய்யக்கூடாதவை;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை[புஹாரி]
இந்த பொன்மொழியில் நம்முடைய நோன்பு அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் பொய்யான பேச்சுக்கள்-செயல்களை விட்டு விலகவேண்டும். ஆனால் நடப்பது என்ன? ஸஹர் இறுதி நேரம் வரை பகலில் அடிக்கும் 'தம்'மையும் சேர்த்து அடிப்பது. பகலில் வழக்கம் போல் பொய்யான பேச்சுக்களை பேசுவது பின்பு நோன்பு திறந்தவுடன் முதல்வேலையாக ஒரு பாக்கெட் சிகரெட்டை காலிசெய்வது. பின்பு வழக்கம்போல் மானாட-மயிலாட-குயிலாட என்று தொலைக்காட்சியில் குதூகலிப்பது. இப்படியான செயல்களை செய்பவர்கள் நோன்பிருந்து எந்த புண்ணியமுமில்லை. எனவே இந்த செயல்களை தவிர்ந்துகொள்ளவேண்டும்
நோன்பை முறிப்பவை;
உண்ணுதல்;பருகுதல்;உடலுறவு கொள்ளுதல்.
நோன்பை முறிக்காதவை;
மறதியாக உண்பதும்-பருகுவதும்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்." [புஹாரி எண் 1933 ]
முள் குத்தியோ, காயமோ ஏற்பட்டு ரத்தம் வந்தால்;
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது இரத்தம் குத்தி எடுத்தார்கள்[புஹாரிஎண் 1939 ]
பல் துலக்குவதால்;
நபி[ஸல்] அவர்கள் நோன்பு நோற்றிருந்தபொது என்னால் எண்ணிச்சொல்ல முடியாத அளவுக்கு பல் துலக்கியதை பார்த்தேன். அறிவிப்பவர்;ஆமிர் இப்னு ரபிஆ [நூல்;திர்மிதி]
எச்சிலை விழுங்குவதால்;
எச்சிலை விழுங்கினால் நோன்பு முறிந்துவிடும் என்று சிலர் தவறாக விளங்கிக்கொண்டு எப்ப பார்த்தாலும் எச்சிலை துப்பிக்கொண்டே திரிவார்கள். எச்சில் விழுங்கினால் நோன்பு முறியும் என்று நபி[ஸல்] அவர்கள் ஒருபோதும் சொன்னதில்லை.
வாந்தி எடுத்தால்;
தானாக ஒருவருக்கு வாந்தி வந்தால் அவர் [நோன்பை]களா செய்யவேண்டியதில்லை. வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் அவர் நோன்பை களா செய்யவேண்டும் என்று நபி[ஸல்] அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா [ரலி] அறிவிக்கும் செய்தி அஹ்மத் போன்ற நூல்களில் உள்ளது.
வாசனை திரவியங்கள் பூசிக்கொள்வதால் நோன்பு முறியும் என்ற நம்பிக்கையும்தவறானது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நோன்பை பரிபூரணமாக நோற்று அதன் மூலம் இறையச்சத்தை பெற்று சுவனத்தை பெறுபவர்களாக ஆக்கியருள்வானாக!
வெள்ளி, 27 ஜூலை, 2012
வீரமணி அய்யா...வேகம் சரியா?
தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் பல்வேறு விசயங்களில் தனது சீரிய சிந்தனையை வெளிப்படுத்துபவர். ஆனால் அவரது சமீபகால எழுத்துக்கள் அவரது தடுமாற்றத்தைக் காட்டுவதாக உள்ளது. ஊடகங்கள்- இணையதளங்கள் போன்ற பொதுவான தளங்களில் பண்பாடான வார்த்தைகளை பயன்படுத்தி கருத்துகளை பதிவு செய்பவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், ஒரு சாரார் கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டு இணையங்களை நிரப்பவும் செய்கின்றனர். இத்தகையோரை எவ்வாறு அணுகுவது என்ற ஒரு கேள்வியும் அதற்கு விடுதலை இதழில் வீரமணி அளித்துள்ள பதிலையும் பாருங்கள்.
கேள்வி: இணைய தளங்களில் கருத்துக்களைப் பதிவு செய்பவர்களில் பலர் பண்பாடற்ற சொற்களைப் பயன் படுத்துவது குறித்து . . .
- தா. தமிழரசி, சென்னை-40
பதில்: அதே மொழியில் அல்லது அதிலும் இழிவான வகையில் அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதே அவர்களைத் திருத்தும் ஒரே வழி! நாய்களுக்கு மல்லிகையையா சூட்டிடமுடியும்?
வீரமணியின் பதிலை படித்தீர்களா? ஒரு பண்பாடற்ற ஒருவன், பண்பாடற்ற வார்த்தைகளை கொண்டு கருத்துக்களை பதிவு செய்தால் அதை படிக்கும் நாமும் அதே போன்ற பண்பாடற்ற வார்த்தைகளையோ அல்லது அதைவிட இழிவான கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தி அவர்களைத் திருத்த வேண்டுமாம். அதாவது நாய்களுக்கு மல்லிகையா சூடமுடியும் என்ற வீரமணியின் வார்த்தையில் சொல்வதானால் ஒரு நாய் நம்மை கடித்துவிட்டால் அந்த நாயை நாமும் விழுந்து கடிக்கவேண்டும் என்பதுதான். இது சரியானதா? ஒரு அறிவிலி கீழ்த்தரமாக எழுதுகிறான் என்றால், அவனை திருத்த என்ன செய்யவேண்டும்? அழகான வார்த்தைகளில் அவனுக்கு உபதேசம் செய்து அவனது தவறை உணர்த்தவேண்டும். அப்படியும் அவன் திருந்தவில்லையானால் அவனிடமிருந்தும் நாம் விலகிக்கொள்ளவேண்டும். அதைத்தானே திருவள்ளுவர், ''இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்' என்று கூறுகிறார். இது வீரமணிக்கு தெரியாதா? தீய செயலை செய்யும் ஒருவனை திருத்த நல்லவர்களும் அதே தீய செயலை கையிலெடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதுதான் பகுத்தறிவா என்று வீரமணியாரை கேட்கவேண்டியிருக்கிறது.
இதே வீரமணியின் இன்னொரு பதிலை பாருங்கள்;
கேள்வி : பிரான்ஸ் நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மாவீரன் பிரபாகரன் அவர்களின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது பற்றி....
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி திண்டுக்கல்
பதில்: மகிழ்ந்து பாராட்டி அந்த அரசுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்! இதன் மூலம் பிரபாகரன் ஒரு விடுதலை வீரனே தவிர, பயங்கரவாதி அல்ல என்பது வரலாற்றில் பதிவாகிவிட்டது!
தமிழீழம் என்ற பெயரில் தமிழ் பேசும் முஸ்லிம்களை கொன்றுகுவித்த பயங்கரவாதியான, அப்பாவித் தமிழர்களை பகடைக்காயாக்கி பதுங்கிய மாவீரன்[!] பிரபாகரனுக்கு பிரான்ஸ் நாடு தபால்தலை வெளியிட்டு விட்டதாம். அதனால் பிரபாகரன் பயங்கரவாதி இல்லையாம் சொல்கிறார் வீரமணியார். ஒரு நாட்டில் ஒருவருக்கு தபால்தலை வெளியிடப்பட்டு விட்டால் அந்த நாடு அவரை அங்கீகரித்து விட்டது என்றோ,அவர் தூயவர் என்றோ அர்த்தம் என்றால், பிரபாகரனுக்கு தபால்தலை வெளியிட்ட அதே பிரான்ஸ் நாட்டில் வீரமணி போற்றும் மாவீரர்[!] பிரபாகரன் தோற்றுவித்த விடுதலைப்புலி இயக்கத்திற்கு தடையில்லை என்று வீரமணி கூறுவரா? பிரபாகரனை போராளியாக மதித்து பிரான்ஸ் தபால்தலை வெளியிட்டிருக்குமானால் அவரது போராளி இயக்கத்திற்கு மட்டும் தடை ஏன்? மேலும், அதே பிரான்ஸ் பாரிஸ் நகர மேன்முறையீட்டு நீதிமன்றம், புலிகளின் முன்னரங்க அமைப்பாக செயற்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு தடை விதித்ததுடன் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதிசேர்த்த குற்றத்திற்காக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஆறு பேர் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்த செய்தியெல்லாம் வீரமணியார் பார்வைக்கு கிட்டவில்லையா?
மேலும் ஒரு நாடு ஒருவருக்கு தபால்தலை வழங்கிவிட்டால் மட்டுமே அவர் மாவீரர் என்றால் இந்திய அரசு வீரமணியால் அதிகம் விமர்சிக்கப்படும் ராஜாஜிக்கு தபால்தலை வெளியிட்டுள்ளதே. வீரமணியின் அளவுகோல்படி அவர் தியாகியல்லவா? அவரை வீரமணி விமர்சிப்பது சரியா? அதோடு ஸ்ரீ ரமண மகரிசி, சுவாமி சிவானந்தா, திருமுருக கிருபானந்த வாரியார், ராமாயணம் இயற்றிய கம்பர்,தியாகராஜர் போன்றோரின் தபால்தலையைக் கூட இந்திய அரசு வெளியிட்டுள்ளதே. இவர்கள் கொள்கையெல்லாம் சரிதான் என்று வீரமணி அங்கீகரிக்கிறாரா? இவர்களையும் மாவீரர்கள் என்று வீரமணி போற்றுவாரா? நாளையே பாகிஸ்தான் சீனா ராஜபக்சேவுக்கு தபால்தலை வெளியிட்டுவிட்டால் அவரையும் மாவீரர் என்று வீரமணியார் அங்கீகரிப்பாரா? ஒரு நாட்டில் தபால்தலை வெளியிட்டு சிறப்பிக்கப்பட்டவர்கள் அனைவரும் தியாகிகள் அல்ல; அவர்களில் சிலரைத்தவிர, என்பதை வீரமணிக்கு தெளிவாக புரியும் வகையில் சொல்லவேண்டுமானால் நமது நாட்டில் சில சினிமா நடிகர்களுக்கு கூட தபால்தலை வெளியிடப்பட்டது. அதற்காக அவர்களெல்லாம் சுதந்திரப் போரட்ட தியாகிகளா? அல்லது சமுதாய முன்னோடிகளா? சிந்தியுங்கள் வீரமணியாரே! தமிழர் பாதுகாப்பு என்ற பெயரில் அரசியல் செய்யாதீர்கள் என்பதுதான் எமது வேண்டுகோளாகும்.
வியாழன், 19 ஜூலை, 2012
புதன், 18 ஜூலை, 2012
ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் திருமணம் செய்து வைப்போம்! துணிவிருந்தால் இந்த அரசு தடுத்துப் பார்க்கட்டும்!
அதன்படி இன்று காலை சென்னையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் திரண்ட இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர், அரசுக்கு எதிராகவும், பெரம்பலூர் ஆட்சித் தலைவர் மற்றும் வட்டாட்சியர் ரேவதி ஆகியோரை பணி நீக்கம் செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். மாநில, மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உணர்ச்சி மிகு கோசங்களை எழுப்பினர்.
இறுதியாக எஸ்.எம் பாக்கர் தனது கண்டன உரையில்,
இன்ஷா அல்லாஹ் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், சம்பந்தப் பட்ட ஜோடிக்கோ, அல்லது அது போன்று யாரேனும் திருமணம் செய்ய விரும்பினால் ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் திருமணம் செய்து வைப்போம்! துணிவிருந்தால் இந்த அரசு தடுத்துப் பார்க்கட்டும்! என ஆவேச முழக்கமிட்ட போது அல்லாஹு அக்பர் எனும் தக்பீர் முழக்கம் விண்ணதிர ஆர்பரித்தது கூட்டத்தை பார்த்த போது அல்லாஹ்வின் சட்டத்தில் கை வைத்தால் இந்த சமுதாயம் சும்மா இருக்காது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியது! அல்ஹம்துலில்லாஹ்.
பெரம்பலூரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக போராட்டம்.



ஜமாத்துல் உலமா தலைவர் அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் ,பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர் இஸ்மாயில் ,இந்திய தௌஹீத் ஜமாஅத் தலைவர் S .M பாக்கர் ,த மு மு க மூத்த தலைவர் ஹைதர் அலி அ, SDPI தமிழ் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி , ,இந்திய தேசிய லீக் இனாயதுல்லாஹ் ,தேசிய லீக் பசீர் அஹ்மத் ,சுன்னத்துவல் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர் ,மறு மலர்ச்சி முஸ்லிம் லீக் உமர் பாருக் ,வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சிங்கந்தர் ,தேசிய லீக் பசீர் அஹ்மத் ,ஆல் இந்தியா மில்லி கவுன்சில் அமீர் அலி ,தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முஹம்மத் மன்சூர் ,இஸ்லாமிய விழிபுணர்வு கழகம் முஹம்மத் கான் பாக்கவி மேலும் பல இயக்க தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் ,இந்த நிகழ்ச்சியை முஹம்மத் ஹனிபா ஒருகிணைந்து வழங்கினார் இந்த் நிகழ்ச்சியில் அணைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தொண்டர்களும் ,பள்ளிவாசல் ஜமாதர்களும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்,.







செவ்வாய், 17 ஜூலை, 2012
முஸ்லிம் ஆண்களே! நீங்கள் ஆண் சிங்கமா? பெண் சிங்கமா?
அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரை கடந்து சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அன்சாரி கூட்டத்தாரே (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
வேதமுடையவர்களுக்கு மாறுசெய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் முழுகால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் முழுகால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தறித்துக்கொள்கிறார்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தறியுங்கள். தாடிகளை வளரவிடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது (21252)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (5892)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு) களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா [ரலி]
நூல் : முஸ்லிம் (435)
திங்கள், 16 ஜூலை, 2012
அய்யா ராமகோபாலன் அவர்களே!
ஞாயிறு, 15 ஜூலை, 2012
ராமன் பாலம் இருப்பதாக நாசா சொன்னதா..??
இந்தக் கட்டுக் கதையைக் கேள் விப்பட்ட மாத்திரத்தில் சேது சமுத் திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி அமெரிக்காவில் உள்ள நாசா நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்டார். நீங்கள் வெளி யிட்டுள்ள படத்தால் இங்குப் பிரச்னை எழுந்துள்ளது. ஆதாம் பாலம் செயற்கையாகக் கட்டப் பட்டதா? அல்லது இயற்கையாக அமைந்த மணல் மேடா? என்று கேட்டார். அன்று மாலையே நாசாவிடமிருந்து தகவல் வந்துவிட்டது. இந்தியா இலங்கைக்கிடையே உள்ள பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று முகத்தில் அறைந் தாற்போல் பதில் கூறிவிட்டதே!
இந்தத் தகவலை சேது சமுத் திரத்திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி செய்தியாளர்களிடம் தெரி வித்துவிட்டாரே. (தினமலர் 26-.7.-2007 பக்கம் 5)
அவாளின் தினமலரில் வெளிவந்த சேதிதான் இது!
உண்மை இவ்வாறு இருக்க சோ ராமசாமி துக்ளக்கிலும் திருவாளர் இல.கணேசன்வாள் சன் தொலைக் காட்சியிலும் புளுகுகிறார்களே! புளுகுதல் என்பது அவாளுக்கு புளியோதரையோ!
இராமநாதபுரத்திற்கும் இலங்கைக் கும் இடையே உள்ள மணல்திட்டு ராமன் கட்டிய பாலம் என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேல் இருக்கும் மணல் திட்டை ராமன் தம்பி லட்சுமணன் கட்டினானோ!
இந்தக் கேள்விக்கு இந்த அறிவு ஜீவிகள் இது வரை பதில் சொல்லாதது ஏன்?
அண்டப் புளுகு பேசுவதில் அக்கிரகார ஆசாமிகளை அடித்துக் கொள்ள அன்டார்டிகாவில் தேடினா லும் கிடைக்கமாட்டார்கள்.
--- விடுதலை ஞாயிறு மலர் (21-12-2012)
அந்த மூன்று விஷயங்கள்[13] மூன்று விடயங்களுக்காக பொய் சொல்பவன் பொய்யனாகக் கருதப்படமாட்டான்:
மூன்று விடயங்களுக்காக பொய் சொல்பவன் பொய்யனாகக் கருதப்படமாட்டான்:
- மக்களிடம் நல்லினக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொய் சொன்னவன்.
- ஒரு கணவன், மனைவி தங்களுக்குள் பேசும் பேச்சுக்களில்.
- எதிரிகளுடன் நடைபெறும் போர்களத்தில்.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உக்பதிப்னு அபீ முஈத் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).
***************************************************
-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....
வெள்ளி, 13 ஜூலை, 2012
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கண்டித்து அணைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்.
வியாழன், 12 ஜூலை, 2012
மூடநம்பிக்கைகள் பலவிதம்;அதில் இது ஒருவிதம்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், இந்தக் கோவில் சன்னிதானம் அருகே, "ஆண்டவன் உத்தரவு பெட்டி' என்ற, பெட்டி உள்ளது. அது என்ன ஆண்டவன் உத்தரவுப் பெட்டி என்றால், பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் தோன்றி, குறிப்பிட்ட ஒரு பொருளை அந்த பெட்டியில் வைக்குமாறு கூறுவாரம். அந்தப் பொருளை கோவில் நிர்வாகத்திடம் பக்தர் ஒப்படைப்பார். பக்தர் கூறுவது உண்மைதானா என்பதை அறிய, கருவறையில் அந்தப் பொருளை வைத்து, சுவாமியிடம், பூ போட்டு உத்தரவு கேட்கப்படும். உத்தரவு சரியென வந்தால், பக்தர் கொண்டு வந்த பொருள், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில் வைக்கப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை, அந்தப் பொருளுக்கு தினமும் பூஜைகள் நடக்கும். இப்பெட்டியில் வைக்கப்படும் பொருள் அல்லது அது சம்பந்தப்பட்ட தொழிலில் முதலில் சரிவும், பின்னர் ஏற்றமும் ஏற்படும் என்பது நம்பிக்கை. பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்கிறது ஒரு ஊடகம்.
400 கோடி ஊழல்; நாற்றமெடுக்கும் நரமோடியின் நல்லாட்சி[!]

இந்தியாவில் வளர்ச்சியில் நம்பர் 1 மாநிலமாக திகழ்வது குஜராத் தான் என்று சங்பரிவார சக்திகள் மார்தட்டிக் கொள்கின்றன. குஜராத் நம்பர் 1 என்பது உண்மைதான்; ஆனால் எதில் நம்பர் 1 என்றால், மதக்கலவரத்தை தூண்டி மக்களை கொல்வதிலும், சொந்த மாநில மக்களையே அகதிகளாக ஆக்குவதிலும், போலி என்கவுண்டர்களிலும், பல்வேறு ஊழல்களிலும் நம்பர் 1 ஆக திகழ்கிறது.
அந்தவரிசையில், குஜராத் மாநில மீன்வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி. மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கியதில், இவர், 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்க முடியாது என, கடந்த மாதம் 29ம் தேதி, குஜராத் மாநில அரசு முடிவெடுத்தது. கவர்னரின் ஒப்புதல் இல்லாமல், இதைச் செய்தது.
இதை எதிர்த்தும், வழக்குத் தொடர அனுமதி மறுத்த முதல்வர் மோடி மற்றும் அமைச்சர்கள் சிலர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடக் கோரியும், குஜராத் மாநில ஐகோர்ட்டில், வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் சோனி ஆகியோர் அடங்கிய ஐகோர்ட் பெஞ்ச், மோடி மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், அமைச்சர் புருஷோத்தம் சோலங்கிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி அளிப்பதில், மாநில கவர்னர் கமலா பெனிவால், இறுதி முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
ஒரு மாநில அமைச்சர் மீது ஊழல் வழக்கு தொடுக்க கவர்னரின் அனுமதி தேவை என்று சட்டம் சொல்லும் நிலையில் குஜராத் அரசு, கவர்னரின் அதிகாரத்தை கையிலெடுத்து அமைச்சரை காப்பாற்ற முயற்சித்து நீதிமன்றத்தில் குட்டுப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் குட்டுப்படுவது மோடிக்கு ஒன்றும் புதிதல்லவே. ஏற்கனவே உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை பல்வேறு விசயங்களில் அவர் வாங்கிக்கட்டிய அனுபவம் உள்ளவர்தானே! குஜராத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையடுத்து ஊழல் அமைச்சர் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதித்து இந்த சங்பரிவார ஊழல் முகத்தை உலகுக்கு காட்ட முன்வரவேண்டும். குஜராத் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பிரதமர் கனவில் மிதக்கும் மோடிக்கு ஒரு பின்னடைவு என்றே அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.கண்ணியமான ஆடையணிந்து வருக; ஆசிரிய-ஆசிரியைகளுக்கு அரசு கண்டிப்பு.
5 கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா நித்யானந்தா?
"ஸ்பந்தனா அசோசியேஷன்' ஒன்பது ஆண்டுகளாக பல அமைப்புகளின் முறைகேடுகளுக்கு எதிராக போராடி வருகிறது."நித்யானந்தா ஆர்கனைசேஷன்' போலியானது என்று அமெரிக்கா கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து, 5 கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா நித்யானந்தா?""என்று, ஸ்பந்தனா அசோசியேஷன் வீணா என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு பிரஸ் கிளப்பில், அவர் கூறியதாவது:
- *நித்யானந்தா ஆசிரமம் நடத்துகிறாரா அல்லது வர்த்தகம் நடத்துகிறாரா?
- *நீங்கள் (நித்யானந்தா) ஐந்து வயது குழந்தை என அறிவித்தீர்களா?
- *உண்மையான சன்னியாசி அல்லது குரு என்றால் காவிஉடை அணிந்து, சாதாரண, உண்மையான வாழ்க்கை வாழ வேண்டும். ஆனால், விதவிதமான ஆடைகள், நகைகள் அணிவது ஏன்? உண்மையான சுவாமிகளா?
- *மருத்துவப் பரிசோதனைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும், அதை வாங்காமல் தப்பிக்க நினைப்பது ஏன்?
- *தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில், "சிடி'யில் இருப்பது போலி மற்றும் மார்பிங் செய்யப்பட்டது என்று செய்தித் துறையினரிடம் தெரிவித்துள்ளீர்கள். ஆனால், இந்தியாவிலுள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், "சிடி' உண்மையானது என்று தெரிய வந்துள்ளது. நமது நாட்டின் ஆய்வு தவறா?
சாதித்துக் காட்டிய சகோதரி.
புதன், 11 ஜூலை, 2012
மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.
அழுகையை நிறுத்த சிறுமிக்கு சூடு: அங்கன்வாடி பணியாளர்கள் சஸ்பெண்ட்.
செவ்வாய், 10 ஜூலை, 2012
அனைத்து மத தமிழ் மக்கள் மன்றம் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே ஆர்ப்பாட்டம்
இவற்றை கண்டித்து அனைத்து மத தமிழ் மக்கள் மன்றம் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை- மயிலை கத்தோலிக்க கிறிஸ்தவ பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமை தாங்கினார்.
நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி, பாண்டிமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மூத்த தலைவர் ஐதர் அலி, தென்னிந்திய திருச்சபை பேராயர் தேவசகாயம், இந்திய சுயாதின திருட்சபை பிஷப் டேவிட், இந்திய சுதந்திர திருச்சபை பிஷப் பிரகாஷ், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, இந்திய தவ்கீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முகமது முனீர், உளுந்தூர்பேட்டை அப்பர்சாமி மடத்தின் தலைவர் சிவஞான தேசிக சுவாமிகள், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் இஸ்மாயில், கிறிஸ்தவ கூட்டமைப்புத் தலைவர் போதகர் விக்டர் தர்மராஜ், இந்திய கிறிஸ்தவ மக்கள் கட்சித் தலைவர் நாதன், மற்றும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் மத உரிமையை பாதுகாக்க கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ராஜபக்சேவின் உருவப் பொம்மையையும் இழுத்து வந்து தீவைத்தனர். போலீசார் அதை அப்புறப்படுத்தினார்கள்.
போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசும்போது, இலங்கையை ஒரு மத, ஒரு இன, ஒருமொழி நாடாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் சிங்கள அரசு செய்து வருகிறது. ஈழ தமிழர்களின் துயரத்தை ஐ.நா.சபைக்கு எடுத்துச் சென்று அவர்கள் உரிமை பெற இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.