வியாழன், 12 ஜூலை, 2012

5 கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா நித்யானந்தா?


"ஸ்பந்தனா அசோசியேஷன்' ஒன்பது ஆண்டுகளாக பல அமைப்புகளின் முறைகேடுகளுக்கு எதிராக போராடி வருகிறது."நித்யானந்தா ஆர்கனைசேஷன்' போலியானது என்று அமெரிக்கா கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து, 5 கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா நித்யானந்தா?""என்று, ஸ்பந்தனா அசோசியேஷன் வீணா என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு பிரஸ் கிளப்பில், அவர் கூறியதாவது:

  1. *நித்யானந்தா ஆசிரமம் நடத்துகிறாரா அல்லது வர்த்தகம் நடத்துகிறாரா?
  2. *நீங்கள் (நித்யானந்தா) ஐந்து வயது குழந்தை என அறிவித்தீர்களா?
  3. *உண்மையான சன்னியாசி அல்லது குரு என்றால் காவிஉடை அணிந்து, சாதாரண, உண்மையான வாழ்க்கை வாழ வேண்டும். ஆனால், விதவிதமான ஆடைகள், நகைகள் அணிவது ஏன்? உண்மையான சுவாமிகளா?
  4. *மருத்துவப் பரிசோதனைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும், அதை வாங்காமல் தப்பிக்க நினைப்பது ஏன்?
  5. *தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில், "சிடி'யில் இருப்பது போலி மற்றும் மார்பிங் செய்யப்பட்டது என்று செய்தித் துறையினரிடம் தெரிவித்துள்ளீர்கள். ஆனால், இந்தியாவிலுள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், "சிடி' உண்மையானது என்று தெரிய வந்துள்ளது. நமது நாட்டின் ஆய்வு தவறா?
மேற்கண்ட ஐந்து கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க வேண்டும் என்று வீணா கூறியுள்ளார். நித்தியிடம் பதில் உண்டா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக