வியாழன், 12 ஜூலை, 2012

கண்ணியமான ஆடையணிந்து வருக; ஆசிரிய-ஆசிரியைகளுக்கு அரசு கண்டிப்பு.

ள் பாதி ஆடை பாதி என்று சொல்வார்கள். ஆனால் ஆடையணிந்தும் நிர்வாணிகளாக வலம் வருகிறார்களோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இன்றைக்கு பெண்கள் பெரும்பாலோரின் ஆடையமைப்பு இருக்கிறது. இறுக்கமான சுடிதார்களுடன் கழுத்தில் பாம்பாக கிடக்கும் துப்பட்டாவுடன் பலரும், பாவடை-தாவணி-சேலை இப்படி எல்லாம் நாகரீகம் என்ற பெயரில் கண்ணாடிகளின் பிம்பமாக அணிந்து வரும் பெண்களே அதிகம் உள்ளனர். இவர்களின் இந்த ஆடை  அமைப்புக்கு 'சுதந்திரம்' என்று சொல்லிக்கொள்கிறார்கள். 

மற்ற இடங்களில் எப்படியோ தொலைந்து போகட்டும். கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டிய ஆசிரியைகள் பலர் சீரியலிலும், சினிமாவிலும் வரும் நடிகைகளை காப்பியடித்து அவர்களைப்போலவே அரைகுறை ஆடையுடன் கல்விச் சாலைகளுக்கு வருகிறார்கள். அவர்களிடம் பயிலும் மாணவர்களை வெறும் மானவர்களாகத்தான் நினைக்கிறார்களே தவிர, அவர்களையும் ஆண்வர்க்கமாக நினைப்பதில்லை. நமது இந்த ஆடை நமது நடை உடை பாவனை இவையாவும் மாணவர்களையும் சக ஆசிரியர்களையும் மன ஊசலாட்டத்திற்கு தள்ளுகிறது. தவறு செய்யத் தூண்டுகிறது என்று இவர்கள் ஒருபோதும் எண்ணிப்பார்ப்பதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் பி.மணி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நல்லதோர் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய உன்னதமான பணியில் உள்ள ஆசிரியர்களும், ஆசிரியைகளும், பள்ளிக்கு வரும்போது தங்களது ஆடை மற்றும் அணிகலன்களை அணிந்துவரும் முறையில் பதவிக்குரிய கண்ணியமும், நமது பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உகந்த நாகரிகமும் இருப்பது அவசியம்.

ஆசிரியர்கள், ஆசிரியைகள் கண்ணியக்குறைவாகவும், மாணவ-மாணவிகள் இடையே ஏற்றத்தாழ்வையும், மனச்சலனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், மரியாதை குறைவையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் உடை அணிவதை தவிர்க்க வேண்டும். 

இதை எல்லாம் வலியுறுத்தி ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டபோதிலும் சமீப காலமாக இந்த அறிவுரைகள் ஆங்காங்கே சில ஆசிரியர்களால் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த நிலை மிகவும் வருந்தத்தக்கது. பள்ளி மாணவ-மாணவிகளிடம் பாதிப்பையும், சமுதாயத்தில் பொது மக்களிடையே அதிருப்தியையும், ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நிலை வருங்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். 

ஆசிரியர்கள், ஆசிரியைகள் பள்ளிக்கு வரும்போது பதவிக்குரிய கண்ணியத்திற்கு சிறிதும் களங்கம் ஏற்படாத வகையில் ஆடை மற்றும் அணிகலன்களை அணிந்து வருமாறும் அநாகரீகமான முறையில் உடை அணிந்து பள்ளிக்கு வருவதை தவிர்க்குமாறும் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றுவதில் தவறுகளோ, குறைபாடுகளோ சிறிதும் ஏற்படா வண்ணம் ஆசிரியர்களின் நடவடிக்கைகள் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும். 
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல், மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகனும் ஆடை கட்டுப்பாடு குறித்து அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.  

அரசு அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கை, ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் நடவடிக்கையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. என்னதான் அரசு கண்டிப்பான உத்தரவுகள் போட்டாலும், அந்த உத்தரவுகள் பத்தே நாளில் சம்மந்தப் பட்டவர்களால் உதாசீனப்படுத்தப் படுவதைக் காண்கிறோம். எனவே, அரசு ஆசிரியர் ஆசிரியைகளுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பதைவிட, மாணவ மாணவியருக்கு சீருடை வழங்கியது போல, ஆசிரியர் ஆசிரியைகளுக்கும் அவரவர் உடலமைப்புக்கேற்ற ஆபாசமற்ற சீருடைகளை வழங்கி, இதை கண்டிப்பாக அணிந்து வரவேண்டும் என்று உத்தரவிடவேண்டும். அவ்வாறில்லாமல் வெறும் அறிவுரைகள் அவர்களிடம் பெரிய மாற்றத்தை உண்டாக்கிவிடாது என்பதை அரசு உணர்ந்துகொள்ளுமா? 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக