செவ்வாய், 31 ஜூலை, 2012

குஜராத் கலவர வழக்கு: 21 பேருக்கு ஆயுள் தண்டனை.


ஆமதாபாத், ஜூலை.31
கடந்த 2002&ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, மெசானாவில் தீப்தா தர்வாசா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. பிரகலாத் கோசா, முன்னாள் நகராட்சி தலைவர் தயாபாய் படேல் உள்பட 83 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். 
இந்த வழக்கை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி ஸ்ரீவஸ்தவா, 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி படேலுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ.150 அபராதமும் விதித்தார். மீதி 61 பேரை விடுதலை செய்தார். 
இந்த தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றும், இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாகவும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக