செவ்வாய், 3 ஜூலை, 2012

காவல் நிலையமா? பங்காரம்மாவின் பஜனைக் கூடமா?

தருமபுரி மாவட்டம் அரூரில் வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம் முன்பாக காவல் நிலையம் , மகளிர் காவல் நிலையம், காவல் துறை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) அலுவலகங்கள் ஒரே வளாகத்தினுள் உள்ளன.


அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.,) அலுவலகமும் அதனுள் கட்டப்பட்டிருக்கும் கோயில்

காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே வேப்பமரத்திற்கு சேலைகளைக் கட்டியும், வேல்கள் குத்தி கரையான் புற்றுக்கு புடவை கட்டி, அம்மன் சிலை வைத்து, கோவி லுக்குள்ளே பங்காரு அடிகளாரின் உருவங்கள் தாங்கிய பதாகைகள் அமைத்து அரசு இடத்தில், அதுவும் சட்டத்தை காக்கும் காவல்துறையினர் அலுவலகத்திற்குள்ளே தனிப்பட்ட லட்சுமி என்ற பெண் பல சிலை களையும் கோயில்களையும் கட்டி அரசு அலுவலகத்தையே பங்காரு அடிகளாரின் பஜனை மடமாக்கி காவிகளின் கூடாரமாக்கி, திருவிழா, பூஜை என்றால் அலுவலகம் என்று கூட பார்க்காமல் மேள தாளங்கள், ஆட்டம், பாட்டம் வான வேடிக்கை பெண்களின் நடனம் என பக்தி மான்கள் கூடும் பஜனை மடமாகவும், பங்காரு அடிகளாரின் கிளை மடமாகவும் செயல்பட்டுக் கொண் டிருக்கிறார்.


டி.எஸ்.பி. அலுவலகத்தினுள் கரையான்புற்றுக்கு புடவை கட்டியும் அம்மன் சிலையும் வைத்துள்ளனர். அருகில் சாமியாரிணி லட்சுமி

அங்கு நடக்கும் பக்தி பஜனையின் கூத்திற்கு டிஎஸ்பி அலுவலகத்தி லிருந்து மின் இணைப்பு கொடுத்து (அரசு வரிப் பணத்தில்) வண்ண வண்ண   விளக்குகள் போட்டு வர்ண ஜாலங்களை செய்து வருகிறார் லட்சுமி.

இங்குதான் தினம் தினம் குறிசொல்லுதல், சாமி ஆடுதல், சக்தி வழிபாடு, அம்மன் அருள் என பல நூறு பெண்களை வைத்துக் கொண்டு அதிகாரிகளின் துணை யோடு பக்தி வியாபாரம் அமோக மாக காவல் நிலையத்திற்குள் இருக்கும் பங்காரு அடிகளாரின் பஜனை மடத்தில் அரங்கேறுகிறது. மக்கள் அறியாமையைப் பயன்படுத்தி மூடநம்பிக்கையை வளர்த்து பணம் பார்க்கும் இந்த சாமியாரிணியான லட்சுமியின் கட்டுப்பாட்டில்தான் அரூரில் இயங்கும் காவல் நிலை யங்கள் உள்ளன.

சாமியாரிணி லட்சுமியின் ஆசியால் மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் தட்சணை கொடுத்து தினம் தினம் பிரசாதமும் சுண்டலும் பெறுகின்றனர்.

இதுகுறித்து சாமியாரிணி லட்சுமி யிடம் கேட்டபோது அவர் கூறிய தாவது மேல் மருவத்தூரில் இருக்கும் சக்தி அம்மா இங்கே வந்து குடி கொண்டிருப்பதாகவும் தினம் தினம் எனக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கு என்று கனவில் சொன்னதாகவும் கூறியதுடன், காவல் நிலையத்தில் இந்த கோயில் இருப்பதால் இங்கு உள்ள காவல் அதிகாரிகள் உட்பட காவலர் அனைவரும் இந்த கோயிலுக்கு உதவி செய்கிறார்கள்.


அரூர் டி.எஸ்.பி. அலுவலகத்தினுள் வேப்ப மரத்திற்கு புடவை கட்டி பூஜை செய்யும் படம்

கோயிலுக்கு தேவையான மின்சாரத்தை எந்த செலவும் இல்லாமல் காவல் நிலை யத்திலே எடுத்து கொடுத்திருக் கிறார்கள். கோயிலில் முக்கிய நாட்களில் நடக்கும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகளில் கலந்துக் கொள்ள ஆயிரம் ஆயிரம் (பெண்கள்) சக்திகள் இங்கே வந்து பூஜை செய்து மேளதாளம் முழங்க ஆடிப்பாடி செல்கிறார்கள்.

இதற்கு எல்லாம் இந்த அய்யாவின் துணை யோடுதான்  (டிஎஸ்பி) ஆதர வோடுதான் செய்கிறேன் என்றதுடன் வெள்ளிக்கிழமை, மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் இந்த புற்றிலிருந்து ஸர்பம் (அம்மா) வருவார் நாங்கள் எல்லாம் தவறாமல் பார்ப்போம் என்று பொய்யைக் கழற்றிவிட்டார்.


காவல் நிலைய கடவுள் பங்காரு அடிகளாருக்கு கோயில் கட்டி பூஜை செய்யும் சாமியாரினி லட்சுமி

அரசுக்கு சொந்தமான இடத் திலோ, அலுவலகத்திலோ, வளாகத் திலோ எந்தவிதமான மதங்களின் கடவுளர்களுக்கு கோயில் கட்டுவதோ, படங்கள் வைப்பதோ, பூஜைகள், வழிபாடு செய்வது வழிபாட்டு தளங்கள் அமைக்க கூடாது என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளதுடன் உச்சநீதிமன்றம் தீர்ப்பும் கூறியுள்ளது.

அத்துடன் அரசு அலுவலகங்களில் இதுபோன்ற வழிபாட்டுதளங்கள் இருக்குமாயின் அவற்றை அகற்றவும் 7553/66-2 என்ற அரசாணையும் உள்ள நிலையில்

அரசு ஆணையையும், உச்சநீதி மன்றத் தீர்ப்பையும் காலில் போட்டு மிதித்து அதன்மீது காஷாய பஜனை மடங்கள் கட்டும் சில காக்கி உடை யணியும் காவல்துறை அதிகாரிகளும் உள்ளனர் அரசு நடவடிக்கை எடுக்குமா?

விடுதலை தமிழ்ச்செல்வன்.

விடுதலை நாளிதழ். 3 .7 .2012


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக