புதன், 4 ஜூலை, 2012

கலாச்சார சீரழிவுக்குப் பெயர் பக்தியா?


இந்த பாரதபண்பாடு. இந்திய கலாச்சாரம்,இந்து தர்மம் அப்புறம் கற்பு வெங்காயம்னு பேசர பசங்கெல்லாம் இங்க வாங்கப்பா!
இவன் என்ன பண்றான் பாருங்க!இவன என்ன பண்ண போறீங்க?

(பெண்களுக்கு குருதாசர் கூடுதல் அருள் வந்து வாயோடு வாய்வைத்தே வாழைப்பழத்தை ஊட்டிவிடுகிறார். அதைப் போல வாழைப்பழம், சர்க்கரை கலந்த பிரசாதத்தையும் அருளுடன் அல்லாடியபடி அவர் பெண்களை அழைத்து வாயோடு வாய் வைத்து ஊட்டுகிறார். அதை ஒரு துளிகூட சிந்தாமல், சிதறாமல் பெண்கள் சாப்பிட்டாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களிடம் குருதாசரின் பிரம்பு பேசுவதை நம்மால் காண முடிகிறது.

கடந்த ஞாயிறன்று காரமடையில் ரங்கநாதருக்குத் தேரோட்டம் நடந்து முடிந்த மறுநாள், கோவை மாதம்பட்டி அருகே உள்ள குப்பனூரில் பந்தசேவை, கவாளசேவை நடத்தி கலக்கினார்கள் தாசர்கள். இதில் பெண்களுக்கு வாழைப்பழம் ஊட்டப்பட்டதைப்-போல ஆண்களுக்கு எலும்மிச்சம்கனி துப்பப்பட்டது. அதை சரியாக துண்டு ஏந்திப் பிடிக்காத ஆண்கள் பிரம்படியை வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்.

தீப்பந்தம் எடுத்து ஆடியபடி வீதிகளில் வலம் வந்து பந்தத்தின் தீநாக்குக்குள் பயமின்றி கட்டை விரலைவிட்டு சாம்பல் எடுத்து பக்தர்களின் நெற்றியில் இட்டு கோவிந்தா பராக் போடுவது பந்தசேவை. வாழைப்பழம் ரங்கனுக்குப் பிடித்தமான கனி. அதை கைபடாமல் வாயாலேயே கவ்வி எடுத்து பக்தைகளுக்கு பிரசாதமாக வழங்குவதற்குப் பெயர் கவாள சேவை.)
 — 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக