புதன், 4 ஜூலை, 2012

குவைத் ரத்ததான விருது விவகாரம்; பொய்யர்களின் பித்தலாட்டத்திற்கு மறுப்பு.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.

அன்பு முஸ்லிம் சகோதர்களே! 

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்ற இறைத்தூதர்(ஸல்) அவர்களின் 
பொன்மொழியின் அடிப்படையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டிய கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு. ஆனால் சிலர் இதற்கு மாற்றமாக தனது சகோதரனின் வெற்றியை கண்டு மகிழ்வதை விட, தனது சகோதரனுக்கு கிடைத்த கண்ணியத்தை சிறுமைப்படுத்தும் வேலையை செய்கிறார்கள். இவ்வாறு செய்யக்கூடியவர்கள் மார்க்கத்தை அறியாத பாமரர்கள் அல்ல. மார்க்க ஞானத்தில் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக மார்தட்டிக் கொள்ளும் ஒரு கூட்டத்தினர் என்பதுதான் வேதனைக்குரியது.

குவைத் நாட்டில் ரத்ததானம் செய்த நிறுவனங்களுக்கு ரத்தவங்கி கடந்த ஜூன் 14 அன்று விருது வழங்கி கவுரவித்தது. இதில் இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கும் ஒரு சான்றிதழும் ஒரு பேழையும் வழங்கி கவுரவித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். இதைப் பற்றி ஒரு ஜமாஅத்தின் சுயபுராண ஏடாக வெளிவரும் ஒரு வார இதழில், ''மற்ற ஒட்டுமொத்த அமைப்புகளுக்காக [ஆந்திரா,கேரளா மற்றும் பல தமிழக அமைப்புகள் உட்பட] சேர்த்து ஜமாஅத்தே ஹிந்த் என்று ஒரு விருதும் சான்றிதழும் மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.'' என்ற ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார்கள்.

இதுபற்றி சில சகோதரர்கள் நம்மிடம் கேட்டதால் இந்த விளக்கத்தை அளிக்கிறோம். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இதுவரை ஒரு ரத்ததான முகாம் மட்டுமே நடத்தியுள்ளது. அவ்வாறு நடத்தும்போது ரத்தவங்கியில் ''ஜம்மியத்து தவ்ஹீத் அல் ஹிந்த்'' என்ற பெயரை பதிவு செய்து எங்கள் அமைப்பின்  மண்டலத்துனைச் செயலாளர் முஹம்மது சேட் அவர்களின் தொலைபேசி எண்னும் பதிவு செய்திருந்தோம். சம்மந்தப்பட்ட விழாவுக்கு சில தினங்களுக்கு முன்பாக ரத்தவங்கியிலிருந்து சகோதரர் சேட் அவர்களை தொடர்பு கொண்டு, இதுபோன்ற விழா நடக்கிறது. அதில் கலந்து கொண்டு உங்களுக்கான விருதை பெற்றுச் செல்லுங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னபின் தான் இப்படி ஒரு விழா நடப்பதே எங்களுக்கு தெரியவந்தது.

அவ்வாறே நிகழ்ச்சியன்று சகோதரர் சேட் மற்றும் மண்டலத் தலைவராகிய நான்[ஜாஹித் ஃபிர்தவ்ஸ்] ஆகிய இருவரும் சென்றோம். நாங்கள் சென்ற நேரம் ஏறக்குறைய விழா முடிவுறும் நேரமாகும். ஜமாஅத் ஹிந்த் என்று அழைத்தார்கள். நாங்கள் செல்லவில்லை. ஏனென்றால் நாம் ஜம்மியத்து தவ்ஹீத் அல் ஹிந்த் என்று தானே பதிவு செய்துள்ளோம் என்று அமைதியாக இருந்துவிட்டோம். மற்றவர்கள் ஜமாத்து தவ்ஹீத் தமிழ்நாடு என்று சொல்லி அவர்களுக்குரிய விருதை பெற்றுக் கொண்டார்கள். பின்பு ரத்த வங்கியை சேர்ந்த ஒரு குவைத்தியை [பெயர் அலி என்று நினைக்கிறேன்] அணுகி எங்கள் ஜமாஅத் பெயரை சொன்னபோது, இதுதான் உங்களுக்குரியது என்று சொல்லி ''ஜமாஅத் அல் ஹிந்த்' என்ற சான்றிதழையும் விருதையும் வழங்கினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக இதுதான் நடந்தது.

ஆனால் எங்களுக்கு கிடைத்த இந்த கண்ணியத்தை குலைக்கும் வகையில் நேஷனல் பெர்மிட் லாரி போல, ஆந்திரா-கேரளா-பாண்டிச்சேரி-தமிழ்நாடு என்று பட்டியல்போட்டு ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் சேர்த்துதான் இந்த விருது வழங்கியதாக சிலர் சிறுமைப் படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் மீது நமக்கு கோபம் இல்லை. ஏனென்றால் அவர்கள் கூற்றின்படி, தமிழகத்தில் இவர்களின் தறுதலை இயக்கம் நீங்கலாக, மற்ற எல்லா அமைப்புகளுக்கும் அதோடு கேரளா, ஆந்திரா போன்ற மாநில அமைப்புகளுக்கும் தலைமை நாங்கள் தான் என்றும் அதனால் தான் எங்களை அழைத்து விருது வழங்கினார்கள் என்றும் தங்களை அறியாமல் கூறி, எங்களை கண்ணியப் படுத்தியுள்ளமைக்கு அந்த வார இதழுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்.

மேலும், ஆரம்பமாக இவர்கள் நெட்டில் போட்ட செய்தியை வைத்து சகோதரர் அபூ முஹம்மது ஜாப்ஜான் அவர்கள் சில விமர்சனக் கேள்விகளை தொடுத்தார். ஆனால் அதற்கு இன்றுவரை இவர்களால் பதில் சொல்லமுடியவில்லை. ஆனால் ''குவைத் நாட்டில் ரத்த தானத்தில் முதலிடம்' என்று நெட்டில் போட்டவர்கள், சகோதரர் அபூ முஹம்மது ஜாப்ஜான் அவர்களின் விமர்சனத்தையடுத்து, ''குவைத்தில் உள்ள இந்திய அமைப்புகளிலேயே அதிகமான எண்ணிக்கையில் ரத்ததானம் செய்த அமைப்பு' என்று சத்தமின்றி அந்த வார இதழில் மாற்றிச் சொல்லியுள்ளார்கள். ஆம்! உண்மை உறக்கத்தில் எழுப்பி கேட்டாலும் ஒரே மாதிரி வரும். பொய் நிமிடத்திற்கு ஒரு வடிவம் எடுக்கும் என்பதற்கு இவர்களே சான்றாக திகழ்கிறார்கள். 

இறைவா! இந்த பொய்யர்கள் மீது சாபத்தை இறக்கு என்று நாங்கள் கேட்கமாட்டோம். ஏனென்றால் முஸ்லிம்களை நாங்கள் சகோதரர்களாகவே பாவிக்கின்றோம். எனவே, இறைவா! இவர்களுக்கு நேர்வழி காட்டு என்பதுதான் எனது பிரார்த்தனையாகும்.

அன்புடன்,
ஏ.கே.ஜாஹித் ஃபிர்தவ்ஸ்.
மண்டலத்தலைவர்.
இந்தியதவ்ஹீத் ஜமாஅத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக