செவ்வாய், 10 ஜூலை, 2012

'ஒரு வீடு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டாலோ, பூகம்பத்தில் சேதம் அடைந்தாலோ நஷ்டஈடு வழங்கும்போது, வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் ஏன் வழங்கக்கூடாது?


புதுடெல்லி, ஜூலை.10
2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது சேதம் அடைந்த வழிபாட்டு தலங்கள் பற்றிய விவர அறிக்கையை தாக்கல் செய்யும்படி, குஜராத் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கடந்த 2002ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் பயங்கர கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின்போது அழிக்கப்பட்ட மற்றும் சேதம் அடைந்த வழிபாட்டு தலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும்படி, குஜராத் ஐகோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, குஜராத் மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் 'அப்பீல்' வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட Ôசுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்Õ முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின் தொடக்கத்திலேயே, மத வழிபாட்டு தலங்களை புதிதாக கட்டிக்கொடுப்பதற்கும் பழுது பார்ப்பதற்கும் அரசு நிதியை பயன்படுத்த இயலாது என்று, குஜராத் அரசு சார்பில் வாதிடப்பட்டது. 
ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கலவரத்தின்போது முற்றிலும் அழிக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

'ஒரு வீடு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டாலோ, பூகம்பத்தில் சேதம் அடைந்தாலோ நஷ்டஈடு வழங்கும்போது, வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் ஏன் வழங்கக்கூடாது?'என்று, அப்போது நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
பின்னர் வழக்கு விசாரணை 30ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக