செவ்வாய், 3 ஜூலை, 2012

அந்த மூன்று விஷயங்கள்[10] நிறைவான கூலியை பெறும் சமுதாயம்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்து உரையாற்றியபோது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும்.

  1. "தவ்ராத்" வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பட்டது. அவர்கள் "நண்பகல் வரை அதன்படி செயல்பட்டார்கள்; பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு "கீராத்" வழங்கப்பெற்றது.
  2. பின்னர் "இன்ஜீல்" வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அஸ்ர் தொழுகை வரை அதன்படி செயல்பட்டுவிட்டுப் பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) அவர்களுக்கும் ஒவ்வொரு "கீராத்" வழங்கப்பெற்றது.
  3. நீங்கள் சூரியன் மறையும் வரை அதன்படி செயல்புரிந்தீர்கள். உங்களுக்கு இரண்டிரண்டு கீராத்துகள் (கூலியாக) வழங்கப்பட்டன.

(அப்போது) "தவ்ராத்" வேதக்காரர்கள் "எங்கள் இறைவா! இவர்கள் வேலை செய்தோ குறைந்த நேரம். கூலியோ அதிகம்!" என்றார்கள். அல்லாஹ், "நான் உங்களுக்குரிய கூலியில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?" என்று கேட்க, அவர்கள் "இல்லை" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் "அ(வ்வாறு முஸ்லிம்களுக்கு அதிகமாகக் கொடுத்த)து என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்" என்று சொன்னான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), புஹாரி).

            ***************************************************

-மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் தொகுத்து, இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக