புதன், 18 ஜூலை, 2012

ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் திருமணம் செய்து வைப்போம்! துணிவிருந்தால் இந்த அரசு தடுத்துப் பார்க்கட்டும்!

நீங்கள் தடுக்கும்திருமணத்தை 

நடத்திவைப்போம்!

கைது செய்து பார்! எஸ்.எம்.பாக்கர் முழக்கம்! 

முஸ்லிம் திருமணத்தை தடுத்தி நிறுத்தி மணமக்களை கைது செய்து அல்லாஹ்வின் சட்டத்திலும் அரசியல் சாசனம் வழங்கிய முஸ்லிம் தனியார் சட்டத்திலும் கை வைத்த தமிழக அரசைக் கண்டித்து இன்று ஐ.என்.டி.ஜே ஆர்பாட்டத்தை அறிவித்து இருந்தது.

அதன்படி இன்று காலை சென்னையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் திரண்ட இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர், அரசுக்கு எதிராகவும், பெரம்பலூர் ஆட்சித் தலைவர் மற்றும் வட்டாட்சியர் ரேவதி ஆகியோரை பணி நீக்கம் செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். மாநில, மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உணர்ச்சி மிகு கோசங்களை எழுப்பினர். 

இறுதியாக எஸ்.எம் பாக்கர் தனது கண்டன உரையில், 
இன்ஷா அல்லாஹ் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், சம்பந்தப் பட்ட ஜோடிக்கோ, அல்லது அது போன்று யாரேனும் திருமணம் செய்ய விரும்பினால் ஐ.என்.டி.ஜே தலைமையகத்தில் திருமணம் செய்து வைப்போம்! துணிவிருந்தால் இந்த அரசு தடுத்துப் பார்க்கட்டும்! என ஆவேச முழக்கமிட்ட போது அல்லாஹு அக்பர் எனும் தக்பீர் முழக்கம் விண்ணதிர ஆர்பரித்தது கூட்டத்தை பார்த்த போது அல்லாஹ்வின் சட்டத்தில் கை வைத்தால் இந்த சமுதாயம் சும்மா இருக்காது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியது! அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக