ஞாயிறு, 15 ஜூலை, 2012

ராமன் பாலம் இருப்பதாக நாசா சொன்னதா..??


இன்டோ-லிங்க்காம் - வைஷ்ணவா நெட்வொர்க் என்ற பார்ப்பன நிறுவனம் ராமன் பாலம் இருப்பதாக நாசா சொன் னதாக ஒரு கதையைக் கட்டிவிட்டது.

இந்தக் கட்டுக் கதையைக் கேள் விப்பட்ட மாத்திரத்தில் சேது சமுத் திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி அமெரிக்காவில் உள்ள நாசா நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்டார். நீங்கள் வெளி யிட்டுள்ள படத்தால் இங்குப் பிரச்னை எழுந்துள்ளது. ஆதாம் பாலம் செயற்கையாகக் கட்டப் பட்டதா? அல்லது இயற்கையாக அமைந்த மணல் மேடா? என்று கேட்டார். அன்று மாலையே நாசாவிடமிருந்து தகவல் வந்துவிட்டது. இந்தியா இலங்கைக்கிடையே உள்ள பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று முகத்தில் அறைந் தாற்போல் பதில் கூறிவிட்டதே!

இந்தத் தகவலை சேது சமுத் திரத்திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி செய்தியாளர்களிடம் தெரி வித்துவிட்டாரே. (தினமலர் 26-.7.-2007 பக்கம் 5)

அவாளின் தினமலரில் வெளிவந்த சேதிதான் இது!

உண்மை இவ்வாறு இருக்க சோ ராமசாமி துக்ளக்கிலும் திருவாளர் இல.கணேசன்வாள் சன் தொலைக் காட்சியிலும் புளுகுகிறார்களே! புளுகுதல் என்பது அவாளுக்கு புளியோதரையோ!

இராமநாதபுரத்திற்கும் இலங்கைக் கும் இடையே உள்ள மணல்திட்டு ராமன் கட்டிய பாலம் என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேல் இருக்கும் மணல் திட்டை ராமன் தம்பி லட்சுமணன் கட்டினானோ!

இந்தக் கேள்விக்கு இந்த அறிவு ஜீவிகள் இது வரை பதில் சொல்லாதது ஏன்?

அண்டப் புளுகு பேசுவதில் அக்கிரகார ஆசாமிகளை அடித்துக் கொள்ள அன்டார்டிகாவில் தேடினா லும் கிடைக்கமாட்டார்கள்.

--- விடுதலை ஞாயிறு மலர் (21-12-2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக