வெள்ளி, 22 ஜூன், 2012

விரட்டப்படும் பர்மா முஸ்லிம்கள்; இனவெறித் தாக்குதலில் பௌத்தர்கள்.

டந்த வாரம் பர்மிய பௌத்தர்களுக்கும் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர் முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டு அவர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதோடுபௌத்த வன்முறையாளர்களால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பர்மிய முஸ்லிம்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.

கடந்த 8ம் தேதி ஏற்பட்ட இன மோதலுக்கு காரணம் கடந்த மாதம் பர்மாவின் மத்தியப் பகுதியிலுள்ள ராம்ரி என்ற ஊரில் பௌத்த பெண்ணொருத்தியை சமூக விரோதிகள் தூக்கிச் சென்று கற்பழித்திருக்கின்றனர்இதைச் செய்தது முஸ்லிம்கள் தான் என்கிற வதந்தி பரவியவுடன் பௌத்த இளைஞர்கள் கொந்தளித்தனர்.

ஏற்கெனவே முஸ்லிம்கள் மீது இனவெறியை உமிழ்ந்து கொண்டிருந்த அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைய... ராக்கின் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் ஏறிய பௌத்த இனவெறியர்கள் அந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலில்10 பேர் உயிரிழந்தனர்.

முஸ்லிம்கள் தாக்கப்பட்ட செய்தி அறிந்த ராக்கின் (அராகன்பிரதேச முஸ்லிம்கள்முஸ்லிம் இளைஞர்கள் மீதான தாக்குத லைக் கண்டித்து ராக்கின் மாநிலத் தலைநகரான சிட்வேயில் பேரணியாகச் சென்றனர் பேரணியைக் கலைக்க காவல்துறை முயற்சிக்க... முஸ்லிம்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே மோதல் உருவானதுஇதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காயமடைந்தனர்.

கடந்த சில மாதங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களில் மிக மோசமான தாக்குதல் இது என்கின்றனர் ராக்கின் பகுதி முஸ்லிம்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த இளைஞர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் மற்றும் படுகொலைகளை அரங்கேற்றியிருக்கின்றனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது ஏ.எஃப்.பிசெய்தி நிறுவனம்.

இந்த வன்முறைத் தாக்குதலுக்கு சரியான காரணம் தெரியவில்லை என்று ஏ.எஃப்.பிசெய்தி நிறுவனம் கூறுகிறதுஆயினும்கடந்த மாதம் நிகழ்ந்த பௌத்த பெண்ணின் கற்பழிப்பு சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று ராக்கின் பிரதேச மக்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

அதே சமயம், பர்மிய முஸ்லிம் சங்கமோ மத்திய பர்மாவில் இருக்கும் ஒரு பள்ளிவாசலுக்கு சென்று வந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது வேண்டுமென்றே இனவெறித் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.

உர்மிய முஸ்லிம் சங்கத்தின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில், ""பேருந்தில் தாக்கப்பட்ட முஸ்லிம்கள் யாத்திரீகர்கள்...'' என்று பர்மாவிற்கு வெளியே இயங்கும் எட்டு ரொஹிங்கியா மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருப்பதோடு இந்த தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவித்திருக்கின்றன.

சில மாதங்களாகவே ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை அந்நியச் சக்திகளும்உள்நாட்டு மதவெறியர்களும் முன்னெடுத்து வருகின்றனர்அதன் விளைவே இந்தத் தாக்குதல் என்றும் மேற்கண்ட மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.

பொதுவாகவேராக்கின் பிரதேசம் என்பது பர்மிய முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் பகுதிமிகவும் ஏழ்மை நிலையிலுள்ள ரொஹிங்கியா முஸ்லிம்களும் இங்கே கணிசமாகவே வாழ்கின்றனர்இவர்கள் பெரும்பாலும் அண்டை நாடான பங்காளதேஷை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.இவர்களின் இருப்பு பெரும்பான்மை பௌத்த மக்களால் குரோதமாகவே பார்க்கப்படுகிறது.

ராக்கின் பிரதேசத்தில் தற்போது நடந்த வன்முறை கட்டுக் கடங்காமல் போகவே அமெரிக்க அரசு கவலை தெரிவித்துள்ளதுவன்முறைத் தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மியான்மர் அரசை வாஷிங்டனுக்கான செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் கேட்டுக் கொண்டிருப்பதோடுசட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் மியான்மர் அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்னொருபுறம்அகதிகளாக வரும் ராக்கின் பிரதேச முஸ்லிம்கள் உள்ளே நுழையாதவாறு எல்லைப் பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது பங்களாதேஷ் அரசுஇதனைக் கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் அலுவலகம் எல்லைப் பகுதியை திறக்குமாறு பங்களாதேஷ் அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

மியான்மர் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த இனவெறித் தாக்குதல் குறித்த செய்திகளை பெரும்பாலான இந்திய இலங்கை ஊட கங்கள் வெளியிடவில்லைசர்வதேச ஊடகங்கள்தான் களச் செய்திகளை அப்டேட் செய்தவண்ணம் இருந்தன.

இலங்கையில் நடப்பதைப் போலவே மியான்மர் பௌத்தர்களும் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக கள மிறங்கியிருக்கின்றனர்ஆனால் வழக்கம்போலவே இந்த நாடுகளுடன் ராஜரீக உறவு வைத்திருக்கும் அரபு நாடுகள் தங்களின் இனம் பாதிக்கப்படுவதைப் பற்றிய அக்கறை இல்லா மல்குறைந்தபட்சம் கலவரம் தொடர்பாக வருத்தத்தைக் கூட தெரிவிக்காமல் தங்களின் குபேர வாழ்க்கையில் லயித்திருக்கின்றன.

புறக்கணிக்கப்படும் பர்மா முஸ்லிம்கள்

47 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மியான் மரில் திபெத் மற்றும் சீனத்தை பூர்வீகமாகக் கொண்ட பௌத்த இனத்தவர்கள் மூன்றில் இரண்டு சதவிகிதம் இருக்கின்றனர்ராணுவத்திலும்அர சாங்கத்திலும் ஆதிக்கம் செலுத்தும் இனங்கள் இவைதான்அதே சமயம்மியான்மர் மக்களிலுள்ள பல்வேறு இனங்களின் மக்கள் தொகை கணக்கு துல்லியமாக அல்லது நம்பத் தகுந்த தரவுகளின்படி இல்லாததால் அவற்றை சரியாக கணக்கிட முடியவில்லை எனக் கூறும் வல்லுனர்கள் தற்போதைய மியான்மர் நாட்டின் மக்கள் தொகை மிகைப்படுத்தப்பட்டும்திரித்தும் கூறப்படுகிறது என்று கருதுகின்றனர்.

இருப்பினும் நாட்டின் 47 மில்லியன் மக்கள் தொகையில் 3 சதவீதம் முஸ்லிம்கள் இருப்பதாகவும் இந்த வல்லுனர்கள் கருதுகின்றனர்ஆனால் வேறு சில வல்லுனர்களின் ஆய்வு முடிவுகள்பர்மிய முஸ் லிம்கள் 13 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்கின்றனர்அதே சமயம்மியான்மரில்7 சதவீத முஸ்லிம்கள் இருப்பதாக முஸ்லிம்களே நம்புகின்றனர்.

மியான்மர் முஸ்லிம்களில் இந்திய முஸ்லிம்கள்தான் பெரும்பான் மையாக இருக்கிறார்கள்மியான்மர் பிரிட்டீஷார் ஆதிக்கத்தில் இருந்தபோது இவர்கள் மியான்மரில் குடியேறியவர்கள்.

அராகன் மாநிலத்தில் பரவலாக இஸ்லாம் நடைமுறையிலுள்ளது.

1 மில்லியன் ரொஹிங்கியா சிறுபான்மையினர் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் மதமாக இஸ்லாம் இருக்கிறது.

இந்திய முஸ்லிம்கள் பர்மிய இனக் கலாச்சார பாரம்பரியத்தோடு கலந்து போயிருப்பதால் சில பர்மியர்களும் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்கள்.

ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு நீண்ட கால வரலாறு உண்டு8 மற்றும் 9ம் நூற்றாண்டுகளில் அரேபிய கடல் பயணிகள் மற்றும் வணிகர்கள் ராக்கின் கடற்பகுதியில் குடியேறியிருக்கிறார்கள்பின்னர் பார்சிகள்முகலாயர்கள்துருக்கியர்கள்பட்டான்கள்வங்காளிகள் போன்றோர் தொடர்ந்து அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் மியான்மரில் குடியேறிய சமூகமாக இருக்கிறார்கள்.

பிரிட்டீஷ் காலணி ஆதிக்கத்தின்போது 1824 முதல் 1948 காலகட்டம்வரை பங்களாதேஷில் உள்ள சிட்டகாங்கிலிருந்து பெருமளவு மக்கள் ராக்கின் மாநிலத்தில் குடியேறியுள்ளனர்.

ராக்கின் மாநிலத்திற்கு வெளியேயும் கணிசமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்இவர்கள் பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

யங்கூன் மற்றும் மண்டாலே நகரங்களுக்கு இடையிலுள்ள டவுங்கு நகரில் வசிக்கும் 90 ஆயிரம் மக்களில் சுமார் 2 ஆயிரம் பேர் முஸ்லிம்கள்தான்.  

பொதுவாக சிறுபான்மையினராக ஒரு பகுதியில் உள்ள முஸ்லிம் கள் சமூகத்தில் தங்களை தனிமைப்படுத்தி ஒரு வரம்பிற்குள் வைத்துக் கொள்ள முனைவதும் அவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

1991ல் அராகன் பிரதேச முஸ்லிம்கள் மீது பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டதுஅரசு துணையுடன் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் இந்த வன்முறையின்போது 2 லட்சத்து 50 ஆயிரம் முஸ்லிம்கள் பங்களாதேஷுக்கு விரட்டப்பட்டனர்.

1994ல் மியான்மர் ராணுவத்தின் தீவிர தாக்குதலின் காரணமாக கிழக்கு மியான் மரின் சிறுபான்மை மக்களான கரென் மற்றும் மோன் இன மக்கள் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தாய்லாந்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இதே போன்று 1996ல் ஷான் மாநில மற்றும் யங்கூன் நகர முஸ்லிகள் மீது 1996ல் நடந்த தாக்குதலில் அரசின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது.

1997 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்க ளில் மாநில சட்டம் ஒழுங்கு மற்றும் மறு நிர்மாண குழுவினரால் (State Law and Order Restoration Council - SLORC) முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டங்கள் ரங்கூனில் நடந்தபோது அதனை அடக்குவதற்கும்ஜனநாயகப் போராட்டக் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கும் செப்டம்பர் 18, 1988ல் இந்த SLORC இராணுவ ஜெனரல் சா மவுங்கால் நிறுவப்பட்டது.

தற்போது SLORC - SPDCயாக மாற்றப்பட்டுள்ளதுஅதாவது மாநில அமைதி மற்றும் மேம்பாட்டுக் குழு State Peace and Development Council என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அராகன் மாநில ரொஹிங்கியா முஸ்லிம்கள் கடுமையான சட்டபொருளாதார மற்றும் சமூக புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ளனர்பெரும்பாலான ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமையைக் கூட மறுத்திருக்கிறது அரசாங்கம்.

இதற்குக் காரணம்பிரிட்டீஷ் காலணி ஆதிக்கத்தின் துவக்கத்தில் இந்த ரொஹிங்கியா முஸ்லிம்களின் முன்னோர்கள் மியான்மரில் வசிக்கவில்லை என்றும்குடியுரிமை சட்டத்தில் இந்த அம்சம் கோரப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறதுஇதைக் காரணம் காட்டித்தான் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

ரொஹிங்கியா முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் மிகவும் மோசமாகவே உள்ளது மியான்மரில்.

பங்களாதேஷிலிருந்து குடி யேறிய ரொஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் மியான்மர் அரசால் கடும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்இவர்கள் பயணம் மேற்கொள்வதிலோபொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலோ பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மியான்மரில் வெளிநாட்டுக் காரர்கள் நடத்தப்படும் அளவிற்குக் கூட இவர்கள் நடத்தப்படுவதில்லைஇம் முஸ்லிம்களுக்கு அயல்நாட்டு பதிவு அட்டை கூட வழங்கப்படுவதில்லை.

இவர்கள் தங்களின் கிராமப் பகுதியிலி ருந்து வெளியே செல்ல வேண்டுமானால் நகராட்சி அதிகாரிகளிடத்தில் இருந்து அனுமதி பெற வேண்டும்.இப்படி அனுமதி கோரினாலும் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு அதிகாரிகள் அனுமதி தருவதில்லைசில நேரங்களில் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி தருவது வேறு விஷயம்!

பௌத்த குடிமக்களுக்கு மட்டுமே மேல்நிலைக் கல்வியை அனுமதிக்கிறது அரசுஇதற்கு அர்த்தம் ரொஹிங்கிய முஸ்லிம்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் ஆரம்ப கல்வியைத் தாண்டி படிக்க முடியாது என்பதேஏனெனில் இவர்கள் குடிமக்களாக அங்கீகரிக் கப்படவில்லை.

ரொஹிங்கியா மக்கள் சிவில் சர்வீஸ் பணியில் நியமிக்கப்படுவதில்லைஒரு முஸ்லிமுக்கு பயணம் செய்வதிலும் குறிப்பிட்ட வழிபாடு செய்வதிலும் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன.

புதிய பள்ளிவாசல்கள் கட்டவும்ஏற்கெனவே இருக்கின்ற பள்ளிவாசல்களை விரிவுபடுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது மியான்மரில்.

ஒரு மில்லியன் ரொஹிங்கியா முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் மியான்மர் சட்டத்தின்படி குடிமக்களாக கருதப்படுவதில்லைஅதனால் இவர்கள் குடிமக்களாக நடத்தப்படுவதில்லைஇவர்கள் நகராட்சியின் அனுமதி பெறாமல் வெளியே செல்ல முடியாததால்மருத்துவம்வேலை வாய்ப்பு,உயர் கல்வி போன்றவற்றை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளதுஅதிகாரப்பூர்வ அனுமதி வாங்க இவர்கள் பணம் செலுத்த வேண்டும் என்கிறது சர்வதேச பொதுமன்னிப்பு சபையான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்.

குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து முஸ்லிம்களை தனிமைப்படுத்த அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதையும்அவர்கள் மீது நுட்பமான முறையில் அடக்குமுறையை ஏவுவதையும் மாநில அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு அதிகாரிகள் திறம்பட செய்து வருகின்றனர்.

உதாரணத்திற்குபௌத்த சமூகத்தினரின் கட்டுமானப் பணிகளுக்காக பணம்  மற்றும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்களை நன்கொடையாகத் தருமாறும்அதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறும் மாநில அமைதி மற்றும் மேம்பாட்டுக் குழு அதிகாரிகள் முஸ்லிம்களை கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

1983ல் அரசாங்கமே அறிவித்த முஸ்லிம்கள் இல்லாத பகுதி (Muslims Free Zone) என்ற குறிப்பிட்ட நகரங்களும் மியான்மரில் இருக்கின்றனஅராகன் மாநிலம் தாண்ட்வே நகரில் சில பூர்வீக முஸ்லிம்கள் இருக்கின்றனர்ஆயினும் இப்பகுதியில் புதிய முஸ்லிம்கள் குடியேறவும் நிலங்களை வாங்கவும்அப்பகுதிக்குள் நுழையவும் அனுமதியில்லைக்வாடவுங்குட் பகுதிகளிலும் வசிக்க முஸ்லிம்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.

2001 பிப்ரவரி மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக சிட்வே நகரில் வன்முறை வெடித்ததுஇக்கலவரம் எப்படி உருவானது என்பதற்கு பல்வேறு உண்மைக் காரணங்கள் இருந்த நிலையில் அரசின் அறிக்கையோபாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்பு படையினர் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள்குடியிருப்புகள்பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை தடுத்து நிறுத்தினர் என்று அவர்களுக்கு சாதகமான அறிக்கையாக இருந்தது.

இராணுவத்தினரே புத்த மதத் துறவிகளைப் போன்ற உடையணிந்து வந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை நடத்தி விட்டு சில பௌத்த துறவிகள் தாக்குதல் நடத்தியதாக சாதகமான அறிக் கைகளை அரசாங்கம் தயாரித்தது.

2001ல் பௌத்தர்களுக்கும்முஸ்லிம் களுக்கும் யங்கூன் நகருக்கு வெளியே நடைபெற்ற கலவரத்தில்இராணுவ உளவு அதிகாரிகள் தமக்கு சாதகமான அறிக்கைகளை தயார் செய்தனர் என்று கூறும் சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம்,

மே மற்றும் செப்டம்பர் 2001ல் கிழக்கு பர்மாவில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான மோசமான தாக்குதலில் நாட்டின் பொருளாதாரம் சரிந்து போனதுடாவுங்கூவடக்கு ரங்கூன் பகுதியில் பௌத்த துறவிகளின் தலைமையில் திரண்ட மக்கள் முஸ்லிம்களின் கடைகள்வீடுகள் மற்றும் பள்ளிவாசல்களில் தாக்குதல்களை  மேற்கொண்டனர்.

குறைந்தபட்சம் 9 முஸ்லிம்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்இந்தத் தாக்குதலை தடுக்கவோஇதில் தலையி டவோ மாநில அமைதி மற்றும் மேம்பாட்டுக் குழு தயாராக இல்லை என்றும் மனித உரிமை அமைப்பு கூறுகிறது.

இதுபோன்ற தாக்குதல்கள் மியான்மர் முஸ்லிம்கள் மீது தொடரும் நிலையில்சிரியாஎகிப்து போன்ற நாடுகளில் மூக்கை நுழைக்கும் ஐ.நாசபை மியான்மர் முஸ்லிம்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவதுதான் ஏன் என்று புரியவில்லை!

அபுஃபைசல்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக