வெள்ளி, 29 ஜூன், 2012

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்!

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,

Ø  ஒருவர் இந்த நாட்டில் இறந்துவிட்டால் அவரது பிரேதத்தை அடக்கம் செய்யும் வழிமுறை என்ன?

Ø  இறந்த ஒருவர் பிரேதத்தை ஊருக்கு அனுப்புவதற்கு செய்யவேண்டிய வேலைகள் என்ன?

Ø  இந்திய தூதரகத்தை எந்தெந்த விசயங்களுக்கு அணுகுவது... எப்படி அணுகுவது?

Ø  உடல் ஆரோக்கியம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தரங்கத்தை 29 -6 -2012 வெள்ளியன்று நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு கூத்தூர் ஜாஃபர்-[மண்டல செய்தி தொடர்பாளர்] தலைமையேற்க, மண்டலத்தலைவர் ஜாஹித்பிர்தவ்ஸ் இறைமறை ஓத, மண்டலச் செயலாளர் அபுஷிபா வரவேற்புரையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் அய்யம்பேட்டை எஸ்.அப்துர்ரஹ்மான், முகவை எஸ்.அப்பாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக மண்டலத் துணைச்செயலாளர் முபாரக்பாஷா நன்றியுடன் நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக