ஞாயிறு, 24 ஜூன், 2012

"முதலில் வேனை நிரப்புங்க;அப்புறம் சிறையை நிரப்பலாம்!'

விலைவாசி உயர்வை கண்டித்து, கடலூர் உழவர் சந்தை முன், பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை, 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் எனக் கூறி, 11 மணிக்கு வேன்களில் வந்த பா.ஜ.,வினர், 35 பேர், 11.20 மணிக்கு ஆர்ப்பாட்டத்தைத் துவங்கினர். பின், 12 மணிக்கு சிறை நிரப்பும் போராட்டம் நடத்த, ஊர்வலமாகச் சென்று, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, வேனில் ஏற்ற முயன்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்களில் பலர் அங்கிருந்து நழுவத் துவங்கினர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர்.தொண்டர் ஒருவர், "போராட்டம், இது போராட்டம், சிறை நிரப்பும் போராட்டம்' என கோஷமிட்டார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், "முதல்ல வேனை நிரப்புங்க... அப்புறமா சிறையை நிரப்பலாம்' எனக் கூறியதும், அனைவரும் சிரித்து விட்டனர்!
-தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக