சனி, 23 ஜூன், 2012

ஒன்றுக்கு பிறகு அடுத்ததைப் 'பெற' நாம் ஒருமாதம் காத்திருக்கணும். ஆனால் இவர்களுக்கு....


புதுதில்லி, ஜூன் 22: சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை என்று காட்ட அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் புதிய இணையதளத்தைத் தொடங்கியுள்ளன. மத்திய எண்ணெய்த்துறை அமைச்சர் எஸ். ஜெய்பால் ரெட்டி இதை தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.

தில்லி மாநகரில் வாழும் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் போன்ற பிரமுகர்கள் வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

சாமானியர்களின் வீடுகளுக்கு சிலிண்டர் அனுப்பிய 21 நாள்களுக்குப் பிறகு புதிய கோரிக்கையைப் பதிவு செய்வோம் என்று அடம்பிடிக்கும் கேஸ் நிறுவனங்கள் இவர்களுக்கு மட்டும் ஓடோடிச் சென்று சப்ளை செய்வதால் இஷ்டத்துக்கு வாங்கி எரிக்கிறார்கள் என்று தெரிகிறது.

சிலரின் சிலிண்டர் பயன்பாடு வருமாறு:

குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி 171

(அதுவும் மே 31 வரை).

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரணீத் கெளர் 161

உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா 83

ராஜ்நாத் சிங் (பாஜக) 80

முன்னாள் அமைச்சர் எம்.எஸ். கில் 79

தொழிலதிபர் நவீன் ஜிண்டால் 369

அமைச்சர் எஸ். ஜெய்பால் ரெட்டி 26

மேனகா காந்தி (பாஜக) 63

சுரேஷ் கல்மாடி (காங்கிரஸ்) 63

முலாயம் சிங் (சமாஜவாதி) 58

மாயாவதி (பகுஜன் சமாஜ்) 45

ராம் விலாஸ் பாஸ்வான் (லோக் ஜனசக்தி) 45

சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்) 49

ஷாநவாஸ் உசைன் (பாஜக) 56

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் 45

லாலு பிரசாத் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) 43

ஆ.ராசா (திமுக) 42

14.2 கிலோ எடையுள்ள, அரசால் மானிய விலையில் விற்கப்படும் கேஸ் சிலிண்டர்களைத்தான் இந்தத் தலைவர்களும் பிரமுகர்களும் பயன்படுத்துகின்றனர். தங்கள் வீடுகளுக்கு வரும் விருந்தினர்களுக்குச் சமைத்துப் போடுவதற்காக இவ்வளவு சிலிண்டர்கள் தேவைப்படுவதாக எல்லா பிரமுகர்களும் தெரிவிக்கின்றனர்.

நன்றி;தினமணி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக