வியாழன், 21 ஜூன், 2012

கடவுளுக்கே காய்ச்சலா? கணினியுகத்திலும் கற்கால நம்பிக்கையா?

னிதனால் வணங்கப்படும் கடவுள் என்பவன் மனிதனின் பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட தன்மையுடன் தான் உண்மையான கடவுள் இருக்கிறான். ஆனால் மனிதனால் கற்பிக்கப்பட்ட கற்பனைக் கடவுள்கள் மனிதனின் பலவீனங்களை தன்னகத்தே கொண்டுள்ளதை பார்க்கிறோம். மனிதனுக்கே உரித்தான ஜனனம்-மரணம்-பசி-நோய்-தூக்கம்-துக்கம்-இல்லறம்-பிள்ளைச் செல்வம் இவ்வாறான அனைத்தும் கடவுளுக்கு இருப்பதாக கூறிக்கொள்கிறார்கள். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அஸ்ஸி பகுதியில் கடவுள் ஜெகநாதர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜெய்ஸ்தா பூர்ணிமா (முழு நிலவு) அன்று கடவுளுக்கு புனித நீராட்டல் நடைபெறும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்கள் ஜெகநாதர் சிலைக்கு அளவில்லாமல் புனித நீர் ஊற்றுவர்.
 
அதேபோல், சமீபத்தில் புனித நீர் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களால் ஆயிரக்கணக்கான குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு, ஜெகநாதர் மீது ஊற்றப்பட்டது. இதன் காரணமாக கடவுள் ஜெகநாதருக்கு, சுகவீனம் ஏற்பட்டது. கடுமையான ஜலதோசம், இருமளால் அவதிப்படுகிறார். கடவுள் ஜெகநாதர் ஒய்வு எடுப்பதற்காக 15 நாட்களுக்கு நடை சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைந்து குணமடைய பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஜெகநாதருக்கு, அவரது குடும்ப டாக்டர் தினமும் இரண்டு வேளை மூலிகையால் தயாரிக்கப்பட்ட மருந்தை அளித்து வருகிறார்.  
   
என்ன? கடவுளுக்கும் காய்ச்சலா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். இது ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு சடங்கு, சம்பிரதாயம் ஆகும். கடவுளை மனிதப் பிறவியாக பாவித்து செய்யப்படும் சடங்குகளில் இதுவும் ஒன்று. இப்படி ஒரு செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

கடவுளுக்கு காய்ச்சல் வருவது போலவும், அந்த கடவுளுக்கு ஒரு மருத்துவர் அதுவும் குடும்ப மருத்துவர் வைத்தியம் செய்வது போலவும், அதையொட்டி கடவுளே பதினைந்து நாள் படுக்கையில் ஓய்வாக இருப்பதாகவும் அந்த நாளில் எவரும் கடவுளுக்கு தொந்தரவு தந்துவிடக்கூடாது என்பதற்காக கதவுகளை மூடுவதாகவும் ஒரு சடங்கு என்றால், கடவுள் வணக்கம் என்ற பெயரில் மனிதர்கள் அவரவர் மனதில் தோன்றியவைகளை சடங்காக ஆக்கியுள்ளனர். வணக்கமாக ஆக்கியுள்ளனர் என்று தெரிந்து கொள்ளலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் கடவுளின் நோய் குணமாக பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்களாம். அப்படியானால் கடவுளுக்கே கடவுளா? மனிதன் தனது கற்பனையை கடவுளாக்கியதால் வந்தாஹ் வினைதானே இது.
இதோ உண்மையான கடவுளின் இலக்கணம்;

[நபியே] நீர் கூறுவீராக; அல்லாஹ் ஒருவனே.
அல்லாஹ் [எவரிடத்திலும்] தேவையற்றவன்.
அவன் [எவரையும்] பெறவுமில்லை; [எவராலும்] பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. [அல்-குர்'ஆன்., அத்தியாயம்;112]

அற்பமான உலகப் பொருளை அடைவதில் தரம் பார்க்கும் மனிதன்; தன்னைப் படைத்த பரம்பொருளை அறிவதில் பலவீனம் கட்டுவதால் ஏற்படும் மேற்கண்ட மூடநம்பிக்கைகளை நம்பும் நிலை ஏற்படுகிறது. பகுத்தறிவை பயன்படுத்துவோம்; பரம்பொருளை அறிவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக