வெள்ளி, 15 ஜூன், 2012

பதிவுசெய்யப்பட்ட மசூதிகள் கணக்கெடுப்பு: இலங்கை அரசின் அடுத்த 'மூவ்'...?

லங்கையில் தம்புள்ள பகுதியில் அமைந்துள்ள பழமையான பள்ளிவாசலை தகர்க்கும் முயற்ச்சியிலும், இடம் மற்றும் முயற்சியிலும் தோல்வியடைந்து, அப்பள்ளியை சேதப்படுத்திய திருப்தியோடு வலம்வரும் புத்த பிக்குகளை கண்டுகொள்ளாத சிங்கள இனவாத அரசு, அடுத்த கட்டமாக முஸ்லிம்களுக்கு எதிரான மற்றொரு காய்நகர்த்தலை தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள், மதரஸாக்கள் எண்ணிக்கையை அறியும் பொருட்டு, அவை பற்றிய தகவல்களைத் தருமாறு முஸ்லிம் மத விவகாரத் துறைக்கு குற்றப் புலனாய்வுத் துறை வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதனை அறிந்த முஸ்லிம் தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தத் தகவல் சேகரிப்பில் "உள்நோக்கத்துடன்' குற்றப் புலனாய்வுத் துறை ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்."மத்திய மாகாணத்தில் தம்புள்ள என்ற இடத்தில் உள்ள மசூதியை இடம் மாற்ற வேண்டும் எனக் கோரி புத்தமதத் துறவிகள் மேற்கொண்ட போராட்டப் பின்னணியில் இந்த விவகாரத்தையும் முஸ்லிம் தலைவர்கள் பார்க்கின்றனர். 
முஸ்லிம்களின் இந்த பார்வை தவறு என்றும், உண்மையிலேயே அனைத்து மசூதிகளும் மதரஸாக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை அறிந்து கொள்வதே குற்றப் புலனாய்வுத் துறையின் நோக்கம். பதிவு செய்வது என்பது இயல்பான சட்ட நடைமுறையாகும்' என்றும், அரசின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். ஆஜ்வர் கூறியுள்ளார்.

ஆஜ்வரின் கூற்று உண்மை என்றே எடுத்துக் கொண்டாலும், அனைத்து மத வழிபாட்டுத் தளங்களையும் புலனாய்வ்த்துரை கணக்கில் எடுத்திருக்க வேண்டும். மாறாக முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் விடயத்தில் மட்டும் இந்த உத்தரவு என்பதுதான் தம்புள்ளாவின் தொடர்ச்சியோ என்ற சாந்தேகத்தை முஸ்லிம்களுக்கு எழுப்புகிறது. ஏற்கனவே புலிகளின் துரோகத்தால் மீள முடியா துயரில் வாழும் முஸ்லிம்களுக்கு, இலங்கை அரசும் அவ்வப்போது இடைஞ்சல் கொடுப்பதை பார்க்கும் போது அம்மக்களின் நிலை பரிதாபமானதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக