புதன், 27 ஜூன், 2012

ஹஜ் பயணிகளுக்கு பயிற்சி முகாம்


மதுரை : ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் மதுரையில் நடக்க உள்ளது. முஸ்லிம்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரையை அக்டோபரில் மேற்கொள்ள உள்ளனர். இதையடுத்து அரசு உதவியுடன் பலர் இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். 

மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு, மதுரை ஹஜ் சர்வீஸ் சொசைட்டி சார்பில், அழகர்கோயில் ரோட்டில் உள்ள அல்அமீன் நகரில் பயிற்சி முகாம் ஜூலை 2ம் தேதி நடக்க உள்ளது. சென்னையில் இருந்து சவுதி அரேபியா சென்று திரும்பும் வரை கடைபிடிக்க வேண்டிய பயண விபரம், நடைமுறைகள் குறித்து விளக்கப்படும். ஹஜ்உம்ரா என்னும் விளக்கப் புத்தகமும் வழங்கப்படும்.

பயணிகளின் ஹெல்த் அன்ட் டிரைனிங் கார்டில், முகாம் பயிற்சியாளர் கையெழுத்து அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்போர் விபரங்களுக்கு மதுரை ஹஜ்கமிட்டி செயலாளர் ஜஹாங்கீரை (94429 39339) தொடர்பு கொள்ளலாம். நிர்வாகிகள் முகமது ஷெரீப், முகமதுஅலி, இப்ராஹிம், மகபூப்பாஷா இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

-thanks;தினமலர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக